தேவாலய சொத்துகளை ஏப்பமிட்ட பலே பாதிரியார்!

தேவாலய சொத்துகளை ஏப்பமிட்ட பலே பாதிரியார்!

Share it if you like it

கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துகளை விற்று ரூ.11 கோடியை ஆட்டையை போட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரோமன் கத்தோலிக் தேவாலயங்களின் தலைமையிடமான பேராயம் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த, பேராயத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியைச் சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் பராமரித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழல்நிலையில், இவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பேயராயத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை பேராயத்தின் அனுமதி பெறாமல் விற்பனை செய்து இருக்கிறார். பாதிரியார் சிரில் ராஜ் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதையடுத்து, செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் நிர்வாகி ஜார்ஜ் ஸ்டீபன் தாம்பரம் நீதிமன்றத்தில் மோசடி செய்த பாதிரியார் மீது வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின்படி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பாதிரியார் சிரில் ராஜ் சுமார் 66 பேருக்கு சட்ட விரோதமாக ரூ. 11.68 கோடி நிலங்களை விற்பனை செய்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமாகி இருக்கிறது.


Share it if you like it