திரையரங்கிற்குள் நரிகுறவர்களை அனுமதிக்காத செயலுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர்கள் வேங்கை வயல் சம்பவத்திற்கு ஏன்? குரல் கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மாலையில் வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் ஒருவித அச்சத்துடனே இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பெண் காவலர்களுக்கு கழக கண்மணிகள் கொடுக்கும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை என தமிழ் சமூகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து, பேச வேண்டிய திரை பிரபலங்கள் வழக்கம் போல கள்ளமெளனமாக இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்களில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படத்தை பார்க்க சென்று இருக்கின்றனர். அப்போது, திரையரங்க ஊழியர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனை, அங்கிருந்த இளைஞர் ஒருவர் கண்டித்து இருக்கிறார்.
மேலும், ஊழியர்களிடம் அவர் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து, அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்த வகையில், இந்த விவகாரம் பொதுமக்களிடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து, திராவிட நடிகர்கள் வழக்கம் போல இச்சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ரோகிணி திரையரங்கிற்கு எதிராக பொங்கிய திராவிட நடிகர்கள் வேங்கை வயல் சம்பவத்திற்கு ஏன்? பொங்கல் வைக்கவில்லை என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.