வாழ்வில் வெற்றி பெற இதை செய்யுங்க… மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை!

வாழ்வில் வெற்றி பெற இதை செய்யுங்க… மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை!

Share it if you like it

செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பொதுத் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில், 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார் ; இதையடுத்து, மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் : இந்த சாதனை உங்களின் தொடக்கம்தான். வாழ்வின் நீண்டபயணம் இனிதான் தொடங்க உள்ளது. உங்களில் பட்டயக் கணக்காளர் (சிஏ) படிப்பை தேர்வு செய்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மருத்துவராக விரும்புவோர் நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற வேண்டும். ஏனெனில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க கட்டணம் குறைவு. அதேநேரம், தனியார் கல்லூரிகளில் கட்டணம் அதிகம் உள்ளது.

தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் சிறந்த கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. எனினும், கிளாட் நுழைவுத்தேர்வு எழுதி தேசிய அளவிலானசட்டக் கல்லூரிகளில் பயில மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். சட்டத் துறையில் உயர்ந்த இடத்தை அடைவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

அதேபோல, மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்கும் தயாராக வேண்டும். இதற்கு கடின உழைப்பு அவசியமாகும். தற்போதைய இளைஞர்கள் செல்போனில் அதிக நேரத்தை வீணடிக்கின்றனர். செல்போன் பயன்பாட்டை மாணவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் சாதனங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையே, பொழுது போக்காக எடுத்துக் கொள்ள கூடாது. கடின உழைப்புமட்டுமே உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று பேசினார்.


Share it if you like it