செல்ஃபி போலீஸ்… வைரல் போட்டோ!

செல்ஃபி போலீஸ்… வைரல் போட்டோ!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன், கர்நாடக மாநில பெண் போலீஸ் எடுத்த செல்ஃபி போட்டோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. இவரது பெற்றோர் குப்புசாமி – பரமேஸ்வரி. இவரது மனைவி அகிலா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அண்ணாமலை, கோவையில் பி.இ. படிப்பை முடித்தார். பின்னர், எம்.பி.ஏ. முடித்தவர், இந்திய குடிமையியல் பணிகள் தேர்வை எழுதி ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றார். 2011-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இந்திய காவல் பணியில் சேர்ந்தவர், கர்நாடக சிங்கம் என்று பெயரெடுத்தார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். பின்னர், திடீரென பணியை ராஜினாமா செய்தவர், சொந்த ஊருக்கே வந்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டார்.

அப்போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர், இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கினார். இதன் மூலம் பா.ஜ.க. தலைவர்களில் பலரும் நெருக்கமானார்கள். இந்த சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, கடந்தாண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவால் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பா.ஜ.க.வில் எழுச்சி காணப்படுகிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூட தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அண்ணாமலை தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து, அம்மாநிலங்களிலுள்ள பா.ஜ.க.வினரை ஊக்கப்படுத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த அண்ணாமலை, அங்கிருந்து தமிழகம் வந்துவிட்டு, நேற்று முன்தினம் கர்நாடகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்போது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அண்ணாமலை ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியாக தன்னை நிலைநிறுத்தியவர். ஆகவே, அவருடன் அந்த பெண் போலீஸ் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல, ஏற்கெனவே தி.மு.க. தொண்டர் ஒருவரின் மகள் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த செல்போனில் ஸ்டாலினின் போட்டோ இருந்தது அப்படியே தெரிந்தது. அந்த போட்டோ இணையத்தில் பயங்கர வைரலானது. அதேபோல, தற்போது இந்த போட்டோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it