தி.மு.க. ஆட்சியில் ராணுவ வீரரின் குடும்பத்துக்கே பாதுகாப்பு இல்லை!

தி.மு.க. ஆட்சியில் ராணுவ வீரரின் குடும்பத்துக்கே பாதுகாப்பு இல்லை!

Share it if you like it

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் ராணுவ வீரரின் குடும்பத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே குண்டர்கள், ரவுடிகளின் அராஜகங்களும் அதிகரித்து விடும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 1 வருட காலத்தில் 15-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. கொள்ளை சம்பவங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கடந்த இரு தினங்களுக்கு முன்புகூட புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்பட்டினம் கிராமத்தில் தொழிலதிபர் முகமது நிஜாம் என்பவரை கொலை செய்து, அவரது வீட்டில் இருந்த 175 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. இதில், கொடுமை என்னவென்றால், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுதான். இம்மாதம் 23-ம் தேதி ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அ.தி.மு.க. ஆட்சியில் அடங்கி ஒடுங்கி இருந்த ரவுடிகள், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தங்களது லீலைகளை தொடங்கி விட்டார்களா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதோடு, மதமாற்ற சம்பவங்களும், ஹிந்து தெய்வங்களை நிந்திக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, அரசுப் பள்ளி மாணவர்களின் அட்டகாசமும், அராஜகமும் எல்லைமீறப் போவதுதான் வேதனையளிப்பதாக இருக்கிறது. பள்ளியிலேயே ஆசிரியை அடிக்கப் பாய்கிறார்கள். ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்க, கடைசி பெஞ்ச்சில் குத்தாட்டம் போடுகிறார்கள். ஒரு ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றிச் சுற்றி வந்து கொலைகொலையாம் முந்திரிக்கா விளையாடுகிறார்கள். பள்ளி வகுப்பறையில் இருக்கும் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்குகிறார்கள். இதைவிட கொடுமை என்னவென்றால், திருநெல்வேலியில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ.யை ஒருவன் கத்தியால் குத்தி இருக்கிறான்.

இப்படி தமிழகத்தில் பொதுமக்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஏன் போலீஸாருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது ராணுவ வீரரின் குடும்பத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என்பதுதான். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரூரில் வசித்து வருபவர் நீலமேகம். இவர், கடந்த 12 வருடங்களாக சி.ஆர்.பி.எஃப். எனப்படும் துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். இவருக்கு வயதான தந்தை, தாய் மற்றும் மனைவி, 10 மாத பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

இந்த சூழலில், நேற்று மதியம் 1 மணியளவில் இவர்கள் 4 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கடுமையான மின்தடை நிலவுவதால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்தபடி தூங்கி இருக்கிறார்கள். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், நீலமேகத்தின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இந்தத் தகவல் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நீலமேகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) சைலேந்திரபாபு ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்தக் காணொளியில் நாங்கள் 6 மாதம் அல்லது 1 வருடத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருகிறோம். அதிலும், 10 நாட்கள் ஊருக்கு வருவதற்கும் திரும்பிச் செல்வதற்குமே சரியாகப் போய் விடுகிறது. மீதி இருக்கும் சொற்ப நாட்களில்தான் குடும்பத்தினருடன் கழிக்கிறோம். மற்ற நாட்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக போராடுகிறோம். ஆகவே, முதல்வர் ஸ்டாலினும், டிஜிபி சைலேந்திரபாபுவும் களவுபோன எங்களது நகையை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தேசத்தைக் காப்பவர்களின் குடும்பத்துக்கே தமிழகத்தில் இந்த நிலையா?


Share it if you like it