ட்விட்டர் ட்ரெண்டிங் ‘#தமிழணங்கே’: அண்ணாமலையின் தமிழ் தாய் போட்டோ!

ட்விட்டர் ட்ரெண்டிங் ‘#தமிழணங்கே’: அண்ணாமலையின் தமிழ் தாய் போட்டோ!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் தமிழ் தாய் போட்டோதான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த மாதம் 8-ம் தேதி டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் ஹிந்தி இருக்கட்டும் என்று கூறினார். இதற்கு மறுநாள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘தமிழணங்கு’ என்ற தலைப்பில் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாரதிதாசனின் பாடல் வரிகளில் வரும் ‘தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்’ என்கிற வரியை குறிப்பிட்டு ஒரு ஓவியத்தை வெளியிட்டிருந்தார். அதாவது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் கொடுப்பதுபோல இது இருந்தது. எனவே, இந்தப் படத்தை தி.க. மற்றும் தி.மு.க. அண்கோ கும்பல் வைரலாக்கியது.

அதேசமயம், அந்த ஓவியத்தில் திரிந்த சடையும், தலைவிரி கோலமும், கயல் விழிகளுமாக, விதவையைப் போல வெள்ளை நிற சேலை அணிந்து, ‘ழ’கர வேலை கையில் ஏந்திய நிலையில், கருப்பு நிறத்தில் காட்சியளித்தார் தமிழ்த்தாய். இந்த ஓவியம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த ஓவியத்தை வரைந்தது எழுத்தாளரும், ஓவியருமான சந்தோஷ் நாராயணன். 2019-ம் ஆண்டு இந்த ஓவியத்தை வரைந்திருந்தார். எனவே, இதுகுறித்து கேட்டதற்கு, தமிழனின் நிறம் கருப்பு. ஆகவே, தமிழன்னையும் கருப்புதான் என்று வக்காலத்து வாங்கி இருந்தார் சந்தோஷ் நாராயணன். எனினும், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழணங்கே’ என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் ஓவியத்தை இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த ஓவியத்தை ம.யாஷிகா என்பவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியம் அண்ணாமலை பதிவிட்ட சில மணித்துகளிலேயே பயங்கர வைரலாகத் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின், அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு படத்தை பதிவிட்டிருக்கிறார்கள். இதனால், யார் பகிர்ந்த போட்டோ அதிகளவில் வைரலாகிறது என்கிற போட்டி எழுந்திருக்கிறது. இதையடுத்து, இரு தரப்பு ஆதரவாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருவரின் பதிவையும் பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it