திராவிட மாடல் குறித்து ஸ்டாலின் பேசியதற்கும், தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை குறித்தும் பங்கம் செய்திருக்கிறார் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை குறித்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடல்னா என்னான்னு கேட்கிறவங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மக்களை ஜாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல்னா புரியாது” என்று கூறியிருந்தார். இதற்குத்தான் பதிலடி கொடுத்திருக்கிறார் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், “ஸ்டாலினுக்கு ஒரு சிறிய கேள்வி. பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் நீங்கள், எப்படி, எதை வைத்து பிரித்துப் பார்ப்பதால் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல மறுக்கிறீர்கள்? பிரதமர் முதல் கவர்னர்கள் வரை அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்கிறோமா இல்லையா… அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன்..
அதேபோல, இன்றையதினம் தினசரி நாளிதழ்களை பார்க்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலும் தி.மு.க.வினரின் விளம்பரங்கள்தான் இருக்கிறது. தி.மு.க. அரசு நிதி இல்லை என்று புலம்பி வரும் அதேசமயத்தில், பேப்பரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து விளம்பரங்களிலும் தவறாமல் உதயநிதி போட்டோ இடம் பெற்றிருக்கிறது. இதுதான் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை” என்று மரண பங்கம் செய்திருக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.