மோடி தெரு என்று பெயர் பலகை வைக்கப்பட்டதால் மிரண்டுபோன தி.மு.க. அரசு, அவசர அவசரமாக அந்த பெயர் பலகையை அகற்றி இருக்கிறது.
மத்திய அரசு ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்தின் நோக்கம், நாட்டிலுள்ள எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்தவர்களை தொழில்முனைவோராக்குவதுதான். இத்திட்டத்தின்படி, 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மானியத்துடன் கூடய கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்டார்ட் அப் தென்காசி என்கிற திட்டத்தின் துவக்க விழா நேற்று தென்காசியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரபல ஸோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மத்திய எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், காணொளி வாயிலாக கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ.க. மாநில செயலாளராக இருக்கும் எஸ்.ஜி.சூர்யா, தென்காசிக்குச் சென்றிருந்தார். அப்போது, செங்கோட்டை நகராட்சி பகுதியிலுள்ள ஒரு தெருவுக்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரு என்று பெயர் சூட்டப்பட்டிருந்ததை அறிந்தார்.
இதையடுத்து, செங்கோட்டை சென்ற அவர், அந்த போர்டுக்கு முன்பாக நின்று ஒரு போட்டோ எடுத்து, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தி.மு.க. தலைமை வரை சென்றிருக்கிறது. இதனால், தி.மு.க. தலைமை மிரண்டு போனது. உடனடியாக மேற்படி செங்கோட்டை நகராட்சி தி.மு.க. நிர்வாகிகளை தொடர்புகொண்டு, அந்த போர்டை அகற்றுமாறு தலைமையிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே செங்கோட்டை நகராட்சி பணியாளர்கள் வந்து அந்த போர்டை அகற்றி இருக்கிறார்கள். இதையும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த போட்டோ வைரலான நிலையில், பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் கண்டால், தி.மு.க.வினருக்கு இவ்வளவு அச்சமா என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். தி.மு.க.வினருக்குத்தான் பா.ஜ.க.வை கண்டால் எவ்வளவு பயம்…