பாகிஸ்தான் பெஷாவர் நகரில் கடத்தப்பட்ட பயங்கரவாதி – பாகிஸ்தானில் தொடரும் மர்மங்கள்

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் கடத்தப்பட்ட பயங்கரவாதி – பாகிஸ்தானில் தொடரும் மர்மங்கள்

Share it if you like it

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று காலை கமருதீன் சையத் என்ற பயங்கரவாதி ஒருவன் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டான். இவன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு பாரதத்தில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் ஹபீஸ் சையத் என்பவனின் மூன்றாவது மகன். இந்த ஹபீஸ் சையத் பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் அரசு ஆதரவிலும் பாதுகாப்பிலும் குடும்பத்தோடு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வாழ்ந்து வருபவன். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹபீஸ் சையத்தின் மகன் கடத்தப்பட்டிருப்பது அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஹபீஸ் சையத் காஷ்மீரின் தனிநாடு விடுதலையை முன்னிறுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவன். லஷ்கரி இ தொய்பா ஜெய்ஷ் ஹே முகமது இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் நெருங்கிய சகாவாக இருந்தவன். தேடப்படும் பயங்கரவாதிகளாக பாரதத்தில் அடையாளப்படுத்தப்பட்டாலும் காஷ்மீரில் தலைமுறைவாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தவன். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இருந்த காலத்தில் இவனால் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவங்கள் அதன் காரணமாக நடந்த பொதுமக்கள் ராணுவ தரப்பு உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் ஏராளமானது.

2014 ல் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆஜித்தோவல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்ட பிறகு காஷ்மீரின் மாநிலத்தின் பாதுகாப்பு ராணுவத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக ராணுவத்தின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு சூழ்நிலைகளை பொறுத்து தேவைப்படும் தற்காப்பு நடவடிக்கைகளை களத்தில் இருப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்த பிறகு காஷ்மீரில் மையம் கொண்டிருந்த பல்வேறு பயங்கரவாதிகள் தங்களின் பாதுகாப்புக் கருதி பாகிஸ்தானிற்கும் இதர பிற வெளிநாடுகளுக்கும் தப்பிப்போய் தஞ்சம் அடைந்தார்கள் .அந்த வகையில் ஹபீஸ் சையது உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கினார்கள்.

2000 வது ஆண்டில் புது தில்லியில் நாடாளுமன்ற தாக்குதலின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை படை தாக்குதல் . காஷ்மீர் ஸ்ரீ நகரில் மாநில சட்டசபை வளாகம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். 1999 டிசம்பர் மாதத்தில் நேபாளத்தின் காட்மண்டுவில் இருந்து புது தில்லுக்கு பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளோடு ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்தப்பட்ட விவகாரம் உள்ளிட்ட அதி முக்கியமான பயங்கரவாத சம்பவங்களின் முழு பின்னணியாக ஒருங்கிணைப்பாளராக இருந்தவன் இந்த ஹபீஸ் சையத் . விமானம் கடத்தப்பட்ட விவகாரத்தில் பயங்கரவாதிகளை விடுவித்து பணய கைதிகளாக இருந்த மக்களை பத்திரமாக மீட்டு வந்த விவகாரத்தில் வாஜ்பாய் அரசுக்கு பெரும் பின்னடைவும் அதிருப்தியும் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு முழு பின்னணியாகவும் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டதற்கு முழுமையான ஆதரவு திரட்டும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவன் என்ற வகையில் இந்திய ராணுவம் உளவுத்துறையின் தீவிரமான தேடுதல் கண்காணிப்பில் இருந்தவன் ஹபீஸ். ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு இனி தனக்கு இந்தியாவிலும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து இருந்தாலும் இங்கு பாதுகாப்பு இருக்காது என்ற நிலையில் அவன் பத்திரமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தவன்.

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் ராணுவ நிலைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் ஏராளமாக உயிரிழந்தார்கள். ஆயுதங்கள் தளவாடங்கள் ஏராளமாக அழிக்கப்பட்டது . இந்த விவகாரத்திற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்க இந்திய தரப்பில் ரகசிய திட்டம் தீட்டப்பட்டது. அதன் படி ஒரு நள்ளிரவில் விமானப்படை துணைக் கொண்டு இந்திய ராணுவத்தினர் குழுவாக பயணித்து இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத அமைப்புகளை எல்லாம் குறிவைத்து தாக்கி அழித்தார்கள் . இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்திற்கு துணையாக பயணித்த விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தான் நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் விமானி பத்திரமாக பாகிஸ்தானில் தரையிறங்கி போர் கைதியானார். ஆனாலும் மோடி அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பல முனையிலும் அழுத்தம் போனதன் விளைவாக அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் வசம் போர் கைதியாக இருந்த இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பத்திரமாக பஞ்சாப் வாகா எல்லையில் இந்திய தரப்பிடம் உரிய கௌரவத்துடன் ஒப்படைக்கப்பட்டார்.

ஒருபுறம் உரித்தாக்குதலுக்கு பதிலடியாக ஒட்டுமொத்தமாக பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டது. எண்ணிலடங்கா பயங்கரவாதிகள் உயிரிழந்தது . மறுபுறம் போர் கைதியான பாரத விமானப்படை விமானி அபிநந்தன் இரண்டு நாட்களில் பத்திரமாக மீட்கப்பட்டது என்று தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான் நின்றது. அதற்கு ஆதரவாக பகிரங்கமாக பாரதத்திற்கு சவால் விட்டவன் ஹபீஸ் சையத். இன்று உலக நாடுகளின் அழுத்தத்தால் அபிநந்தன் மீட்க பட்டு இருக்கலாம் .மோடி அரசு இரவோடு இரவாக பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்திருக்கலாம். ஆனால் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் என்ன ? அதன் ஆழம் எப்படி இருக்கும்? அதனால் வரக்கூடிய அழிவு எப்படி இருக்கும்? என்பதை கூடிய விரைவில் பாரதத்திற்கு நாங்கள் செய்து காட்டுவோம். அதிலிருந்து இந்திய ராணுவமும் பாரதமோ எந்த காலமும் மீண்டு வர முடியாது. அதை சீக்கிரமே செய்து காட்டுவோம் என்று பகிரங்கமாக பயங்கரவாத மிரட்டல் விடுத்தவன். ஆனால் அதன் பிறகு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டது தொடர்ச்சியாக பல்வேறு பிரிவினைவாதிகள் அவற்றின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் சட்டத்தின் பிடியில் சிக்கினார்கள். ஒரு சிலர் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு சத்தம் இன்றி ஹபீஸ் பாகிஸ்தானிலேயே கிட்டத்தட்ட தலைமறைவாக வாழத் தொடங்கினான்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு மாநிலம் முழுவதும் ராணுவம் காவல்துறை பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் இறங்கியது. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதன் ஆதரவு நடவடிக்கைகள் எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு நெருக்கடி பஞ்சம் அரசியல் குழப்பம் என்று எல்லா விஷயத்திற்கும் இந்தியாவின் ஆதரவு வேண்டும். இந்தியாவின் ஆதரவு இல்லை என்றால் அடுத்த வேளை உணவு கூட இல்லை என்ற நிலையில் ஆப்கானிஸ்தானின் தீவிரவாத குழுக்களும் ஆட்சியாளர்களும் அல்கொய்தா பயங்கரவாதமும் கூட பாரதத்திற்கு எதிரான எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முன்வராத நிலை. ஒட்டுமொத்த பயங்கரவாதிகளும் காஷ்மீர் விவகாரத்தில் கூட அமைதி காக்க தொடங்கினார்கள்.

காஷ்மீரும் ஆப்கானிஸ்தானமும் தங்களின் கைவிட்டு போன நிலையில் எஞ்சி இருப்பது பாகிஸ்தான் மட்டுமே . பாகிஸ்தானின் தங்களை வலுப்படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் கையில் எடுக்கலாம் என்ற நிலையில் இருந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் நிலையும் மோசமானது பலத்த அடியானது. பாரதத்தின் பண மதிப்பிழப்பு சிறப்பு அந்தஸ்து விலக்கம் கொரோனா கால முடக்கத்தையும் மீறி எழும் பொருளாதார என்று எல்லா மட்டத்திலும் பாரதம் உயர்ந்து நிற்கிறது. மறுபுறம் பொருளாதார வீழ்ச்சி உள்நாட்டு பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடி ஸ்திரத்தன்மையில்லாத ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் செய்ய முடியாத நிலையில் பொருளாதார குழப்பங்கள் என்று பாகிஸ்தான் திவாலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் லாகூர் இஸ்லாமாபாத் ராவல் பின்டி உள்ளிட்ட நகரங்களில் பாரதத்திற்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்றிய பலரும் சாலை விபத்து தனிமனித கொலை மர்மம் மரணம் என்று தொடர்ச்சியாக உயிரிழந்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு பெரும் நாச வேலைகளை காஷ்மீரில் முன்னெடுத்து வந்த அபு காசிம் காஷ்மீரி என்னும் பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல் கோட் பகுதியில் இருக்கும் அல் குத்தூஸ் மசூதியில் தொழுகைக்கு வந்திருந்த போது சக பாகிஸ்தானியரால் தொழுகையின் போது மசூதியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான். அதன் தாக்கம் மறையாத நிலையில் நேற்று பெஷாவர் நகரில் ஹபிஸ் சையத்தின் மகன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கிறான்.

சமீபமாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக மர்மம் மரணம் அடைந்து வருகிறார்கள். அதில் கனடாவில் மரணம் அடைந்த ஹர்தீப் சிங் நிஸாரின் மரணத்தில் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கூட இருக்கக்கூடும் என்ற ரீதியிலும் ஒரு கருத்து நிலவி வருகிறது . பாரதத்தின் வெளியுறவு துறையால் தேடப்படும் நபர்களை கொன்று அழிப்பதன் மூலம் உலக அரங்கில் பாரதத்திற்கு ஒரு அவப்பெயரும் குற்றச்சாட்டுகளையும் தேடித் தர முடியும் என்று திட்டமிட்டு கூட பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இது போன்ற கொலைகளை அரங்கேற்றக் கூடும் என்ற கோணத்திலும் ஒரு கருத்து உலா வருகிறது. அப்படி இருக்க பாரதத்தில் தேடப்படும் பயங்கரவாதிகளாக சர்வதேச குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பலரும் பாகிஸ்தானிலேயே தொடர்ந்து மரணிப்பதும் அந்த மரணங்கள். அதன் பின்னணி பற்றி பாகிஸ்தானின் உளவுத்துறையோ ராணுவமும் காவல்துறையோ இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது. எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

இதன் பின்னணி என்ன? இதில் சூழ்ந்திருக்கும் மர்மம் என்ன ? என்பதன் ஒரு நுனி கூட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ க்கு இதுவரையும் தெரியாமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை. அது தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் இதுவரையில் அதைப் பற்றி விசாரிக்கவும் உரிய அறிக்கைகள் எதையும் வெளியிடாமல் மௌனம் காப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை உலக நாடுகள் முன்வைப்பது போல் பாரதத்திற்கு உலக அளவில் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு தான் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ இதையெல்லாம் செய்கிறதா? அதனால் தான் மௌனம் காக்கிறதா ? என்ற கேள்வி எழுகிறது. மறுபுறம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயும் அஞ்சி நடுங்கும் வகையில் ஏதேனும் ஒரு மர்மமான பின்னணி இந்த சம்பவங்களின் பின்னே இருக்கிறதா ? அதனால் தான் அதை பற்றி பேசவும் அறிக்கை வெளியிடவும் கூட பாகிஸ்தான் துணிவில்லாமல் மௌனம் காக்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆனால் கடந்த பல வருடங்களாக பாரதத்தோடு முறுக்கிக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு கூட பாரதத்திற்கு வரமாட்டோம் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானின் கிரிக்கெட் அணி தற்போது பாரதத்திற்கு விளையாடுவதற்கு தாமாக முன்வந்து பங்கேற்க்கிறது.பாரதத்தோடு நல்லுறவையே பாகிஸ்தான் விரும்புகிறது என்று அவ்வப்போது ஆட்சியாளர்கள் ஒருபுறம் சமாதானம் வேண்டுகிறார்கள். இதை எல்லாவற்றிற்கும் இடையில் பாரதத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முழு காரணமாகவும் பின்னணியாகவும் இருந்த பல்வேறு பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பாகிஸ்தானிலேயே மரணம் அடைகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இதோ இப்போது கடத்தப்படுவதும் நடக்கிறது .

ஆனால் இது எதைப் பற்றியும் இதுவரையில் வாய் திறந்து பேசாத பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் தான் உலகில் பாரதத்தை பார்த்து பயம் கொள்ளாத ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே என்ற வார்த்தையும் பேசுகிறார்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. அது பாரதம் அதன் பாதுகாப்பு விஷயத்தில் சரியான பாதையில் பயணிக்கிறது. பாரதத்தின் ஆட்சியாளர்கள் உள்நாட்டு பாதுகாப்பு எல்லை புற பாதுகாப்பு தேசத்தின் இறையாண்மை விஷயத்தில் சமரசம் இல்லாமல் கடுமையாக நடவடிக்கை எடுக்கிறார்கள் .அதன் பலனை எதிர்க்கவோ தடுக்கவோ இயலாத நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட பகை நாடுகளும் கள்ள மவுனம் காக்கிறது. அந்த வகையில் பாரதம் அதன் பாதுகாப்பு விஷயத்தில் வெற்றி நடை போட்டு முன்னேறுகிறது. இது ஒவ்வொரு பாரதியனும் நிம்மதியாக பெருமிதமாக உணர வேண்டிய விஷயமே.


Share it if you like it