காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் ‘ஜிலாண்டியா’ – புதிய தகவல்!

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் ‘ஜிலாண்டியா’ – புதிய தகவல்!

Share it if you like it

பூமியின் நிலப்பரப்பு 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் 8-வதாக ஒரு கண்டம் பூமியில் இருந்ததாகவும், ‘கடல்கோள்’ பேரழிவு காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அந்த 8-வது கண்டம் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் நீண்ட காலமாக புவியியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். 375 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் காணாமால் போன 8-வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். அந்த 8-வது கண்டத்தின் ஒரு பகுதி தான் கடந்த 1642-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நியூசிலாந்து என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வரைப்படத்தையும் விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.அதாவது, 8-வது கண்டத்தின் 94 சதவீத நிலப்பரப்பு கடலுக்கு அடியில் மூழ்கிவிட்ட நிலையில், மேலே இருக்கும் 6 சதவீத நிலப்பரப்பு தான் தற்போது நாம் காணும் நியூசிலாந்து என்று புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Share it if you like it