விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வந்த மாணவர் உயிரிழப்பு- தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் ஆணவத்திற்கு பலியாகும் அப்பாவி மக்கள்

Share it if you like it

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மண்டல அளவிலான ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட +2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் – பெற்றோர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக ஆழ்ந்த இரங்கல் மற்றும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி சமத்துவ புர மைதானத்தில் நடந்த மண்டல அளவிலான ஒட்டப் பந்தயத்தில் பங்கேற்ற ரிஷிபாலன் என்ற 17 வயது தனியார் பள்ளி மாணவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் உள்ள பொறையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவர் மயங்கி விழுந்த போது முதலுதவி கிடைத்தது தாமதம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனதில் தாமதம் காரணமாக தான் உயிரிழப்பு நேரிட்டது என்று மாணவரின் பெற்றோர் – உறவினர் சாலை மறியல் செய்துள்ளார்கள்.

பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டி நடந்த இடத்தில் அவசர முதலுதவி மற்றும் அவசர ஊர்தி சேவை இருந்திருந்தால் மாணவருக்கு உடனே முதலுதவி சிகிச்சை கிடைத்து மருத்துவமனையை உரிய நேரத்தில் அடைந்து நிச்சயம் உயிரிழப்பு தடுத்திருக்கலாம்.

இந்த வசதிகள் அங்கு இருந்து அது கிடைத்தது தாமதம் என்றால் அதற்கு காரணமானவர்கள் யார் ? இல்லை என்றால் அவசிய உயிர் காக்கும் உபகரணங்கள் முதலுதவி வசதிகள் கூட இல்லாத விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கியது யார்? என்ன காரணம் ? யார் பொறுப்பு ?அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டது ? . என்று அரசு விளக்கம் தர வேண்டும். மண்டல அளவிலான ஒட்டப் பந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மாரடைப்பால் மரணம் என்றால் மாரடைப்பு வரும் அளவுக்கு அவனுக்கு பாதிப்பு ஏற்பட என்ன காரணம்? யார் காரணம் ? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று முதல்வர் விளக்கம் தர வேண்டும்.

மண்டல அளவிலான ஒட்டப் பந்தயத்தில் பங்கேற்கும் மாணவர் அதுவும் தனியார் பள்ளி மாணவர் இதற்கு முன் பள்ளி அளவில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க பயிற்சி போட்டி என்று எவ்வளவு முறை ஓடி பயிற்சி செய்திருப்பார்? . இயல்பில் இருதய நோய் இருக்கும் மாணவனுக்கு இது சாத்தியமா? . உடல் தகுதி மருத்துவ ஆய்வு எல்லாம் நடந்து தான் விளையாட்டு போட்டிகள் பங்கேற்க அனுமதி வாங்க முடியும். அதுவும் தனியார் பள்ளி விதிகளை கட்டாயம் கடை பிடிக்கும். அந்த வகையில் அவன் இயல்பில் நல்ல ஆரோக்கியமான மாணவன் என்பது தெளிவாகிறது. இயல்பில் நல்ல ஆரோக்கியமான மாணவன் திடிரென மயங்கி விழ அதீத உடல் சோர்வு காரணம் என்றால் மயங்கி விழும் நிலை வரை அதை அந்த மாணவர் அனுபவிக்க யார் காரணம் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டது?.

மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கி வைக்க வரவேண்டிய மாவட்ட கல்வி அலுவலர் முதல்வரை வரவேற்க மயிலாடுதுறை போய் போட்டிகள் நடக்கும் இடத்திற்கு வர நான்கு மணி நேரம் தாமதமானதானது வரை சரி. ஆனால் இந்த தாமதத்தை அறிந்து உரிய அவகாசம் கொடுத்து மாணவர்களை ஓய்வெடுக்க அறிவுறுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் நான்கு மணி நேரம் வெயிலில் அலைக்கழித்ததால் தான் மாணவர் மயங்கி விழுந்திருக்கிறார். முதலுதவி கிடைத்தது தாமதமானதானது தான் உயிரிழக்க காரணம்.

ஆனால். முதல்வர் வரும் காரணம் அதனால் ஏற்பட்ட தாமதம் அதன் காரணமாக அலைக்கழிப்பு அரசு அதிகாரிகள் ஊழியர்கள் அலட்சியம் காரணமாக ஒரு தனியார் பள்ளி மாணவர் உயிரிழந்த கொடூரத்தை அப்படியே மறைத்து ஒட்டப் பந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மாரடைப்பால் மரணம் என்று ஒரு முதல்வர் இரங்கல் தெரிவிப்பது அரச பயங்கரவாதத்தின் உச்சம்.

பள்ளி மாணவர்கள் கல்வி தரம் – பாடநூல் – தேர்வுமுறை அனைத்திலும் அரசியல் செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாழ்படுத்தியவர்களுக்கு இன்று அவர்களின் உயிரும் அனாவசியமாக தெரிவது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் தினக் கூலிகளாக இருக்கும் தாய் – தந்தையர் தங்களின் உழைப்பு – வருவாய் பெரும் பகுதியை மகனின் கல்வி விளையாட்டு மேம்பாட்டுக்காக செலவழித்து அவனது எதிர் காலம் சிறக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தவர்கள் இன்று அரசின் அலட்சியம் ஆட்சியாளர்கள் ஆணவத்தால் தங்களின் மகன் உயிரிழந்தது எவ்வளவு பெரிய இழப்பு அவர்கள் வம்ச இழப்பு எதிர் காலம் நம்பிக்கை இழப்புக்கு யார் பொறுப்பு?.

பொங்கல் பை முதல் நலத் திட்டங்கள் வரை வாங்க மக்கள் மணிக் கணக்கில் வெயில் – மழையில் காத்திருக்க வேண்டும். தடுப்பூசி – மருந்து உபகரணங்கள் வாங்க பெண்கள் – குழந்தைகள் உட்பட நோயாளிகள் மணிக் கணக்கில் உயிரை பணயம் வைத்து காத்திருக்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்கள் என்றால் இலவச பாடநூல் – புத்தகங்கள் – புத்தக பை – காலணி – சீரூடை என்று மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் சிற்றுண்டி வழங்கும் நலத் திட்ட தொடக்க விழா என்றால் அதற்கு பச்சிளம் குழந்தைகள் குளித்து முடித்து பசியோடு பள்ளிக்கு போய் மணிக் கணக்கில் பசியோடு காத்திருக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் பார்வையில் அரசின் நலத் திட்ட உதவிகள் வேண்டி நிற்கும் மாணவர்கள் பெற்றோர் நோயாளிகள் எல்லாம் வெறும் ஜடங்கள். அதனால் அவர்களுக்கு இவர்கள் உபாதைகள் உயிர் எல்லாம் ஒரு பொருட்டாக தெரியாது. ஆனால் இந்த மக்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை எல்லாம் செய்வோம். இப்படி எல்லாம் தருவோம் என்று இலவசம் நலத் திட்டங்கள் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கி அதை சொன்னபடி நாங்கள் செய்கிறோம் என்று மக்களிடமும் எதிர் கட்சிகள் மற்றும் மத்திய அரசு முன் தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆட்சியாளர்கள் கூட இவர்கள் உயிர் பற்றி கவலை கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது.

நேற்று சொன்ன வாக்குறுதியை தான் இன்று செய்கிறோம் . இதை எல்லாம் நல்லவிதமாக செய்து கொடுத்தால் தான் அடுத்த முறை மீண்டும் அந்த மக்களின் முன் வாக்கு கேட்டு போக முடியும். அதற்கு அவர்கள் மத்தியில் நம் மீது நம்பிக்கை நல்லெண்ணம் இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஆட்சியாளர்களுக்கு இருக்குமானால் நிச்சயம் அவர்கள் இப்படி பட்ட அலட்சிய போக்கில் அரசை நடத்த மாட்டார்கள்.

மாறாக இலவச வாக்குறுதி மற்றும் நலத் திட்டங்கள் அரசு உதவி எல்லாம் எதிர் பார்த்து வாக்களிக்கும் மக்களை பிச்சைக்காரன் போல பார்க்கும் மனநிலை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம். நாம் அதிகாரம் தான் இதை எல்லாம் செய்கிறது . நம் கையெழுத்து தான் அவர்களுக்கு எல்லாம் கிடைக்க காரணம். அந்த வகையில் நாம் படியளக்கும் மகாராஜா வம்சாவளி. அவர்கள் கையேந்தி நிற்கும் பராரிகள் என்ற ஆட்சியாளர்கள் ஆணவம் தான் மக்களை தொடர்ந்து அலைக்கழிப்பு செய்யும் அரசு நிர்வாக அகந்தையின் வெளிப்பாடு.

ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு . மக்கள் நாட்டை வழி நடத்த தங்களுக்கு வழங்கிய பொறுப்பு என்ற உணர்விருந்தால் நிச்சயம் மக்கள் மீது அக்கறை மரியாதை இருக்கும் . தங்கள் பொறுப்பு கடமை புரியும். தவறுகள் நேரும் பட்சத்தில் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க துணிச்சலும் இருக்கும். ஆனால் இம்முறை தேர்தலில் இந்த வாக்குறுதி . அடுத்த தேர்தலில் வேறு வாக்குறுதி என்று திட்டமிட்டு மக்களை ஏமாற்றி எப்படி ஆட்சிக்கு வரலாம் ? வந்த பிறகு இதோ அதோ என்று எப்படி இழுத்தடிக்கலாம் ? என்று இறுமாப்புடன் இருப்பவர்களுக்கு இதற்கெல்லாம் அரசு அதிகாரிகள் தயவு வேண்டும் . அதனால் அவர்கள் என்ன அலட்சியம் காட்டினாலும் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற கூட்டணி தர்மம் கைகளை கட்டி போடத்தான் செய்யும். காரணம் அவர்கள் பார்வையில் மக்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் உயிருள்ள பிறவிகள். ஆட்சி அதிகாரத்தில் வந்துவிட்டால் அவர்கள் அனைவரும் வெறும் பிண்டங்கள் தான். கடந்த கால ஆட்சியாளர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று வாயால் சொன்னார். சமகால ஆட்சியாளர்அதை செய்கையில் நிரூபிக்கிறார்.அவ்வளவு தான் வித்யாசம்.

நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் காரணமாக நீட் வேண்டாம் என்று சொன்னவர்கள் இன்று அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் வேண்டாம் என்று சொல்வார்களா ? இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத முதல்வர் தான் ரிஷி பாலன் உயிரிழக்க காரணம் என்று காரணம் என்று பேசுவார்களா? ஊடகங்கள் இது பற்றிவி வாதம் செய்யுமா?.கடந்த ஆட்சியில் தினமும் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை கொடுத்த அப்போதைய எதிர் கட்சி தலைவர் தான் இன்று முதல்வர் இப்போது அவர் என்ன செய்வார் ? என்று பார்ப்போம். ஊடகங்கள் அவரை எப்படி அணுகும் ? என்று கவனிப்போம்.

எதற்கெடுத்தாலும் சிங்கப்பூரை பார். துபாயை பார் என்பவர்கள் இங்கு மட்டும் தான் தான் 500 ரூபாய் நலத் திட்டங்கள் வழங்க 5 ஆயிரம் செலவு செய்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற அசிங்கம் எல்லாம் துபாய் சிங்கப்பூரில் எல்லாம் இந்த அநியாயம் பார்க்க முடியாது என்ற உண்மை புரியுமா? அங்கெல்லாம் பல ஆயிரம் கோடி நலத் திட்டங்கள் கூட அந்த துறை சார் அதிகாரி துவக்கி வைத்து அமைச்சருக்கு தகவல்கள் அனுப்பி விட்டு அடுத்த வேலையை பார்க்க போவார் என்பது தெரியுமா.?

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் சேவையாக இருக்க வேண்டும் அதற்கு மக்கள் தகுதியான ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு முதலில் அவர்கள் இலவசம் பணம் பிரியாணி பொட்டலம் தவிர்த்து தரமான வாக்காளர்களாக மாறவேண்டும் அது வரை இது போன்ற அரசு அலட்சியம் தொடரும். உயிரிழப்புகள் தினசரி செய்தியாகும்