ஹிந்துக்களே எங்களிடம் மண்டியிடுங்கள்! இஸ்லாமிய மதகுரு திமிர் பேச்சு..

ஹிந்துக்களே எங்களிடம் மண்டியிடுங்கள்! இஸ்லாமிய மதகுரு திமிர் பேச்சு..

Share it if you like it

நாடு முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால், அடிப்படைவாதிகளிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், காஷ்மீர் மற்றும் டெல்லியை சேர்ந்த இஸ்லாமிய மதகுருமார்கள் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

1990-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. அதேவேளையில், மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் என மிகப் பெரிய ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது.

காஷ்மீரை விட்டு பரிதாபமாக வெளியேறி இன்று வரை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஹிந்து பண்டிட்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இப்படத்தை பார்த்துவிட்டுத்தான் ஏராளமான ஹிந்துக்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். மேலும், காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்டவர்களின் வலியை உணர்த்தியுள்ளது இத்திரைப்படம். அதன்படி, ஹிந்துக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில், ஜம்முவை பூர்வீகமாகக் கொண்ட மௌலானா ஒருவர் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை தடை செய் என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். “நாங்கள்” 800 ஆண்டுகள் “அவர்களை” ஆண்டோம், “அவர்கள்” அழிந்து போவார்கள். ஆனால், “நாம்” அல்ல என்று இஸ்லாமியர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் பேசியுள்ளார். அதே போன்று, டெல்லி அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சூஃபி மௌலானா சையத் சர்வார் சிஷ்டி இவ்வாறு பேசியுள்ளார். “பல நூற்றாண்டுகளாக உங்களை ஆட்சி செய்தோம், மீண்டும் உங்களை ஆட்சி செய்வோம் என்று நட்புடன் எச்சரிக்கிறோம். நீங்கள் எங்களுடன் சண்டையிடுவீர்களா? நீங்கள் மொய்னுதீன் சிஸ்டியின் கல்லறையின் முன் தலைவணங்குங்கள்” என்று இவரும் திமிராக பேசியுள்ளார்.


Share it if you like it