Share it if you like it
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள திரையரங்கில் படத்தை பார்த்த பின் பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு கூறினார் : ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப் படத்தில் உண்மைச் சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, காதல் என்ற பெயரில் நடக்கும் மோசடி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிதும் உதவும். அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும். திண்டுக்கல், தேனி, தாராபுரம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் தாராபுரத்தில் காவல் ஆய்வாளர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார்.
Share it if you like it