திருமாவளவன் ஏற்படுத்திய‌ நீங்காத காயம்

திருமாவளவன் ஏற்படுத்திய‌ நீங்காத காயம்

Share it if you like it

நீங்காத காயம்

“தலித் பேந்தர்” என்ற அமைப்பின் மாநில அமைப்பாளராக, 1989 ஆம் ஆண்டு, திருமாவளவன் இருந்தார். 1991ஆம் ஆண்டில், அந்த அமைப்பை “விடுதலை சிறுத்தைகள்” என மாற்றினார். ஆரம்ப காலகட்டத்தில், தேர்தலில் போட்டியிட அவர்கள் விருப்பம் காட்டவில்லை.
1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, முதன் முதலாக, “விடுதலை சிறுத்தைகள் கட்சி” தேர்தலில் போட்டியிட்டது. அப்போது முதல் தொடர்ந்து எல்லா தேர்தலிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போட்டியிட்டு வருகின்றது.

பல்வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து, தங்களுடைய அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டனர். அதன் நிறுவனர் தொல் திருமாவளவன் அவர்களின் செயல்களையும், அவரது பேச்சையும், அவரது கட்சியினர் தொடர்ந்து கேட்டு, நம்பி, செயல்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் குறி வைத்து தாக்குவதும், அவரை நம்பி அவர் வழியில் பயணிக்கும் மக்களை குழப்புவதும், வீண் வதந்தி பரப்புவதையே செய்து வருவதால், அவர் சார்ந்துள்ள கட்சியினரே, அவர் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.

கோவிலில் உள்ள சிற்பங்கள்:

2019 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், புதுச்சேரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு குறித்து பேசும் போது, “குவி மாடமாக இருந்தால் மசூதி” என்றும், “கூம்பு வடிவில் இருந்தால் கிறிஸ்துவ தேவாலயம்” எனவும், “அசிங்கமான பொம்மைகள் இருந்தால், அது இந்து சமய மக்கள் வழிபடும் கோவில்கள்” என கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மனு ஸ்மிருதி:

2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடந்த இணையதளக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தொல் திருமாவளவன் அவர்கள், “மனு ஸ்மிருதி” பற்றிக் கூறிய கருத்து, இந்துக்கள் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

இது போலவே, தொடர்ந்து ஹிந்து மதம் குறித்து, பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நமது நாட்டில் நடப்பது, மனுஸ்மிருதி ஆட்சியா அல்லது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி ஆட்சியா என்றால், நிச்சயமாக பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் இயற்றப்பட்ட, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படியே ஆட்சி நடந்து வருகின்றது. ஆனால், தேவையே இல்லாமல், இந்துக்கள் வணங்கும் கடவுளைப் பற்றி, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டு இருப்பது, இந்துக்களுக்கு மனதில் காயம் ஏற்படுகின்றது.

விநாயகர் – முருகர்:

“முஸ்லிம்கள் நினைத்து இருந்தால், இந்தியா முஸ்லிம் தேசமாக மாறி இருக்கும்” எனக் கூறி, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது.

மேலும், ஒரு அப்பனுக்கு பிறந்த விநாயகரும் – முருகரும், எப்படி தமிழ் கடவுளாகவும், வட இந்தியக் கடவுளாகவும் இருக்க முடியும் என, இந்துக்கள் மனதை புண்படும் படி பேசி உள்ளார்.

மதுவிலக்கு கொள்கை:

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, 2021 ஆம் ஆண்டு, தொல் திருமாவளவன் அவர்கள் , ட்விட்டரில் ஒரு பதிவு செய்து இருந்தார். அதில், தேசியக் கொள்கையாக, மத்திய அரசு “மதுவிலக்கு” கொள்கையை அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.
மாநில அரசு நினைத்தாலே செய்ய முடிந்ததை, மத்திய அரசிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மீது, உண்மையிலேயே அக்கறை இருந்தால், மதுவிலக்கு குறித்து, தமிழக அரசை எதிர்த்து ஏன் போராட்டம் செய்யவில்லை? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சந்திப்பு:

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பின்பு, அதற்கு மூலக் காரணமாக இருந்து செயல்பட்டவர் என குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சேவை, திருமாவளவன் அவர்கள், இலங்கைக்குச் சென்று சந்தித்து உரையாடியது, தமிழக மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரத்தக்கறை படிந்தவரென விமர்சனம் செய்தவர்களே, அவரிடம் கைக்குலுக்கி, கட்டித் தழுவி, புகைப்படம் எடுத்துக் கொண்டது, ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழ் மக்களுக்கும், அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.

மேலும், ஈழத் தமிழர்கள் கொல்லப் பட்டதற்கு, முக்கிய காரணியாக விளங்கியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட, காங்கிரஸ் கட்சியுடனும், திமுகவுடனும் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டதன் மூலமாக, தமிழக மக்கள் அவர் மீது, கோபம் கொண்டு உள்ளனர்.

இட ஒதுக்கீடு குறித்து:

இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் போகக் கூடாது என்றும், 15% எஸ்.சி.க்கும் (S.C.), 7.5% எஸ்.டி.க்கும் (S.T.), 27% பிற்படுத்தப் பட்டவர்களுக்கு (B.C.) எனவும், மொத்தம் 49.5% இவ்வாறு சென்று விடும் எனவும், மீதமுள்ள 50.5 சதவீத இடங்களும் முற்பட்டவர்களுக்கு (F.C.) சென்று விடும் எனவும், ஓருவித புதுக் கருத்தை தெரிவித்து உள்ளார்.

இது முற்றிலும் தவறான கருத்து என்பது, அந்தக் காணொளியைப் பார்க்கும் அனைவருக்கும், நன்கு புலப்படும். இதன் மூலம், சமூகத்தில் நிலவும் ஒற்றுமையை, சீர் குலைக்க முயல்கிறாரோ? என, அரசியல் வல்லுனர்கள், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தீக்குளித்து உயிரிழப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே, ஜமீன் தேவர்குளம் காலனித் தெருவை சேர்ந்தவர், வெற்றிமாறன். அவர், “தமிழ்நாடு பறையர் பேரவை” என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, மனுத் தாக்கல் செய்து இருந்த நிலையில், அவரின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்து, மன வேதனையில் முதல்வர் வீடு அருகே, தீக்குளித்தார். தீக்காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மற்ற மாநிலங்களில், அதுவும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் போராடும் திருமாவளவன் அவர்கள், அவரின் கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் தமிழகத்தில், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டு, அவருக்காக என்ன குரல் கொடுத்தார்?

பாதிக்கப் பட்டவரின் கோரிக்கையை நிறைவேற்ற, முதல்வரை சந்தித்து, கோரிக்கையை பரிசீலிக்க ஏதேனும் முயற்சி செய்தாரா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு, இதுவரை எந்த பதிலும் தெரியவில்லை.

பகிரங்க குற்றச்சாட்டு:

17 வருடங்களுக்கு முன்பு, கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை நடந்தது. அதற்காக சட்டப் போராட்டம் நடத்தியது, மூத்த வழக்கறிஞர் பொ. ரத்தினம் மற்றும் அவருடைய தலைமையிலான குழு.

அந்த வழக்கு, கடந்து வந்த சோதனைகள் பற்றிய பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், “பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு, உணர்வு ரீதியாக உதவ, எந்த அமைப்பும் முன் வருவது இல்லை என்றும், தலித் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள், இந்த தீர்ப்புப் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டு, தங்களை உயர்த்திப் பிடித்து விளம்பரம் தேடுவதாகவும், அந்த வகையில் சில தவறுகளை சுட்டிக் காட்டுவதாகவும், வழக்கு நடத்த வேண்டாம் என கொல்லப்பட்ட முருகேசனின் தந்தையிடம், திருமாவளவன் பேசினார்” என்றும் வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த பொ. ரத்தினம், குறிப்பிட்டு உள்ளார்.

வெளிநாட்டில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால், இங்கு போராட்டம் செய்யும் திருமாவளவன் அவர்கள், இந்தியாவில் பெரும்பான்மையாக மக்கள் பாதிக்கப்படும் போது, அமைதி காப்பது ஏன்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்துக்களை மட்டும் விமர்சனம் செய்வதும், இந்துக் கடவுளை மட்டும் கேலி செய்வதும், இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதும் என, இந்துக்களை மட்டுமே குறி வைத்து தாக்குவது, இந்துக்களிடைய நீங்காத காயத்தை ஏற்படுத்துகின்றது.
அதன் மூலம், இந்துக்கள் – மற்ற மதங்களை இடையே பேதம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றாரோ? எனவும் அரசியல் வல்லுனர்கள், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

உதவிய தளங்கள்:

https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-speech-on-hindu-temple-structure-goes-controversy/
https://www.thenewsminute.com/article/thol-thirumavalavan-interview-manusmriti-practiced-all-walks-life-136351
https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-controversy-speech-qmnscn
https://twitter.com/thirumaofficial/status/1444326771361415168
https://www.thehindu.com/news/international/Tamil-Nadu-MPs-delegation-meets-Mahinda-Rajapaksa/article16886491.ece
https://twitter.com/SuryahSG/status/1444614391505113090
https://www.dinamani.com/tamilnadu/2021/oct/04/fire-death-infront-of-cm-house-3711667.html
https://www.vikatan.com/social-affairs/politics/article-about-advocate-rathinams-allegation-on-thirumaavalan-in-kanaki-murugesan-case


Share it if you like it

One thought on “திருமாவளவன் ஏற்படுத்திய‌ நீங்காத காயம்

  1. திருமாவளவன் முகமூடியை கிழித்தெரிந்து விட்டீர்கள் நண்பரே…

Comments are closed.