கர்நாடகாவைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகளுக்கு ஆதரவாக மக்களவையில் குரல் கொடுத்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்து மாணவிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவகாரம் ஹிஜாப், பர்தா, புர்கா ஆகியவைதான். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தின் சட்ட, திட்டங்களை மதிக்காததால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதான் தற்பொழுது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஹிஜாப், பர்தா, புர்கா அணிவது மாணவிகளின் உரிமை. இதில், பா.ஜ.க. தலையிடக் கூடாது என்று இச்சம்பவத்தில் தேவையில்லாமல் அக்கட்சியையும் இணைத்து தவறான பிரசாரத்தை மேற்கொள்ள முயன்றனர். ஆனால், போலி புரட்சியாளர்களின் உண்மயான சுயரூபம் வெளிவரத் துவங்கிய பிறகு, பா.ஜ.க.வுக்கும் இப்பிரச்னைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டனர். மேலும், பர்தா, புர்கா விஷயத்தை திட்டமிட்டே அரசியலாக்கும் முயற்சியாக மக்களவையில் அல்லாஹூ அக்பர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி. திருமாவளவன் குரல் கொடுத்திருந்தார்.
இதற்குத்தான், பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு, வேதனை தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாணவிக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி. திருமா, தமிழ் மாணவிக்கும் குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.