Pfizer நிறுவனம் கொடுத்த விண்ணப்பத்தை இந்திய அரசு நிராகரித்ததற்கான காரணம் இதுதான்..!

Pfizer நிறுவனம் கொடுத்த விண்ணப்பத்தை இந்திய அரசு நிராகரித்ததற்கான காரணம் இதுதான்..!

Share it if you like it

கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் சேத்தன் பகத். இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு ட்வீட் செய்து உள்ளார்.

வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும். மிக சிறந்த மருந்துகளில் ஒன்றாக ஃபைசர் தடுப்பூசி உள்ளது. 2020 – டிசம்பரில் இந்த தடுப்பூசியை, இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால் இந்திய அரசு எந்த பதிலும் கூற அதனால் பிப்ரவரி மாதம் விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது அந்த நிறுவனம். டிசம்பர் மாதமே தடுப்பூசியை அனுமதித்து இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஃபைசர் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிக்க மத்திய அரசு தயக்கம் காட்ட இதுவே காரணம்.

  •  ஏதேனும் ஒரு பக்க விளைவு ஏற்பட்டால். அதற்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என்கின்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து வேண்டும் என்று ஃபைசர் வலியுறுத்தியது.
  • கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும். பணியில் சில ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது. இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற ஃபைசர் நிறுவனம் மறுத்தது.
  • இந்திய மருந்துகளை – 2 டிகிரி மற்றும் -3 டிகிரியில் பாதுகாக்க முடியும். ஃபைசர் நிறுவனத்தின் மருந்துகளை -60 டிகிரியில் இருந்து 70 டிகிரியில் மட்டுமே பாதுகாக்க முடியும். மேலும் இதன் விலை 3 மடங்கு அதிகம் ஆகும்.
  • இந்தியா மெளனம் காத்ததால் பைசர் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை. இந்தியா சுட்டிக்காட்டியவற்றை சரி செய்து. விரைவில் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் போட்டு கொள்கிறோம் என்று. பழைய ஒப்பந்தத்தை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுக்கொண்டது.

Pfizer offers vaccine to Indian govt at not-for-profit price | Hindustan Times

  •  2020 – டிசம்பரில்  ஒப்பந்தம் செய்து. உரிய நேரத்தில் மருந்துகளை வழங்குகிறோம் என்று கூறிய நாடுகளுக்கே இன்று வரை ஃபைசர் நிறுவனம் மருந்துகளை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மை இவ்வாறு இருக்க சேத்தன் பகத் அவர்கள். எந்தவித புரிதலும் இல்லாமல் தனது கருத்தை வெளியிட்டு இருப்பது மிகவும் தவறான செயல் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Pfizer: Will supply Covid-19 vaccine only through government channels | India News,The Indian Express

 


Share it if you like it