திமோத்தி ரவீந்தர் – ஓர் அறிமுகம் :
20 டிசம்பர் 1958 ஆம் ஆண்டு, S. திமோத்தி என்பவருக்கும், எமிலி ஜேன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் அருகே, கெட்டி என்ற சிறிய கிராமத்தில் வளர்ந்தார். தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கெட்டியில் உள்ள தி லேட்லா மெமோரியல் பள்ளியில் (The Laidlaw Memorial School of St George’s Homes) படித்து, பிறகு கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.யூ.சி. (P.U.C.) படித்தார்.
அதற்கு பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில், பிஎஸ்சி இயற்பியல் பாடம் படித்து, அதன் பிறகு, பெங்களூரில் உள்ள தியோலாஜிக்கல் கல்லூரியில் பி.டி. (B.D.) முடித்தார்.
அவருடைய மனைவி பெயர் திருமதி ஹேமலதா. அவருக்கு இரண்டு மகன்கள். “ஜித்தேந்தர் ஜஸ்வந்த் திமோத்தி” ஜெர்மனியிலும், “அஜித் ஸ்டீவ்” துபாயிலும் வசித்து வருகின்றனர்.
தென் இந்திய திருச்சபையின் கோயம்புத்தூர் மறை மாவட்ட பிஷப் (Coimbatore Diocese Church of South India) ஆக, 25 செப்டம்பர் 2013 ஆம் அன்று, பொறுப்பு ஏற்றார்.
பணம் மோசடியில் ஈடுபட்ட பிஷப் திமோத்தி ரவீந்தர் :
கோவை வெள்ளலூரில் உள்ள சிஎஸ்ஐ (CSI) மண்டலத்துக்கு சொந்தமான, 125 தேவாலயங்களில் பாதிரியார்கள் உட்பட ஏராளமானவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், தேவாலய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய போத்தனூர் தென் இந்திய திருச்சபையின் (C.S.I.) பாதிரியார் கெர்சோம் ஜேக்கப், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுவை அளித்து உள்ளார்.
அதில், “அவரின் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில், எவ்வளவு தொகை செலுத்தப்பட்டு உள்ளது என நிர்வாகத்திடம் கேட்டதாகவும், அதற்கு நிர்வாகம் சரிவர பதில் கூறவில்லை எனவும், புகார் தெரிவித்து உள்ளார்.
அவர் PF பற்றிக் கேட்ட பின்பு தான், 2019 ஆம் ஆண்டு புதிய கணக்கை தொடங்கி, 45 ஆயிரம் மட்டும் செலுத்தி உள்ளதாகவும், 125 தேவாலயங்களிலும் பிடித்தம் செய்த தொகை, 25 கோடிக்கு மேல் இருக்கலாம் எனவும், பெரும் அளவில் PF அலுவலகத்திற்கு செலுத்தாமல் மோசடி செய்ததாகவும், இதற்கு உடந்தையாக இருந்த பிஷப் மற்றும் தற்போதைய பிஷப் திமோத்தி ரவீந்தர், பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்து உள்ளார்”.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது கூட்டு சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஆகிய மூன்று பிரிவுகளில் (120B, 408, 420) போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
2016ல் திமோத்தி ரவீந்தர் தலைமையில் நடந்த மோசடி :
2016 ஆம் ஆண்டு, திமோத்தி ரவீந்தர் மோசடி செய்ததாக செயின்ட் பால்ஸ் சர்ச்சை சேர்ந்த திலீப் குமார் என்பவர், திருப்பூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளார். ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, திலீப் குமார் திருப்பூரில் உள்ள மாஜிஸ்டிரேட்டிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில், திருப்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் (Central Crime Branch) 15 கோடி மோசடி செய்ததாக, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.
புகார் அளித்த திலீப் குமார் கூறியதாவது :
திமோதி ரவீந்திரன் மற்றும் 11 நபர்கள், 15 கோடிக்கு மேல் பணத்தை, புதிய கட்டிடம், பள்ளிக்கூடம் கட்டுவதற்காக பல்வேறு நபர்களிடம் வசூல் செய்ததாகவும், அதற்கான சரியான கணக்கை இன்னும் தரவில்லை எனவும், பல லட்சம் அளித்தவர்களுக்கு முறையான ரசீது தரவில்லை எனவும், 2016 ஆம் ஆண்டு புகார் தெரிவித்து இருந்தார். ஆனால் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாததால் நீதிமன்றத்தை அணுகி, திமோத்தி ரவீந்தர் உள்ளிட்ட 12 நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் (120B, 406, 408, 420, 468, 471, 506) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திமோத்தி ரவீந்தர்
திமோத்தி ரவீந்தர் தலைமையில் நடந்த தலித் கலை விழா :
2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி, திமோத்தி ரவீந்தர் முன்னிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சிறப்புரையாற்ற தென் இந்திய திருச்சபையின் (C.S.I.) முதல் தலித் கலை விழா, ஈரோட்டில் நடந்தது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் :
யார் தவறு செய்து இருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டும் என்பதே, நமது சட்டம், நமக்கு காட்டும் வழிமுறை. ஆனால், எல்லோருக்கும் பொதுவான முறையில் இல்லாமல், சிலருக்கு மட்டும் மாறுவது ஏனோ?
தவறு செய்தவர்கள், தண்டனையில் இருந்து தப்புவது, யாராலும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதது.
2016 ஆம் ஆண்டே, கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் கைது செய்யப் படவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பிறகே, 2017 ஆம் ஆண்டு காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கையை (F.I.R.) பதிவு செய்தனர்.
தற்போதும், அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து இருக்க வேண்டும். ஆனால், நெஞ்சு வலி எனக் கூறி, ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.
மற்ற மதத்தினர் என்றால் பத்திரிக்கைகளின் பார்வை:
ஏப்ரல் 21, 2021 அன்று, பிரபல ஆங்கில பத்திரிக்கையான “தி ஹிந்து”வில் (The Hindu) செய்தி ஒன்று வெளியானது. அதில் லயோலா கல்லூரி, தன்னுடைய “96 வது கல்லூரி விழாவை” கொண்டாடியது என்றும், நிகழ்ச்சி 3 மணி நேரத்திற்குப் பதிலாக, 180 நிமிடங்கள் ஆக குறைக்கப் பட்டது என்றும், செய்தி வெளியிட்டது. இதனை படித்த வாசகர்கள் இரண்டிற்கும் அர்த்தம் ஒன்று தானே என வியப்பு அடைந்தனர்!
ஒருவேளை கொரோனா பரவும் காலத்தில், நிகழ்ச்சிகளை குறைத்து வைத்து விட்டார்கள் என நினைக்கத் தோன்றும் அளவிற்கு, செய்தி வெளியிட்டனரோ? என வாசகர்கள், அந்த செய்தியைப் படித்ததும், நினைத்துப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்!
சத்குருவைப் பற்றி அதிகம் பேசியவர்கள் அருகில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம் பற்றி எதுவும் பேசுவது இல்லை. நித்தியானந்தர் பற்றி பல்வேறு வகையில் செய்தி வெளியிட்ட தொலைக் காட்சி ஊடகங்கள், இந்த மோசடி முறைகேடுகளைப் பற்றி, என்றாவது ஓரு நாள், ஏதேனும் ஒரு விவாதம் நடத்தி இருக்கின்றனதா? எத்தனை பத்திரிகைகள் இதனைப் பற்றிய செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.? இது தான் மதச்சார்பற்றத் தன்மையா?
பல தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, அந்த பணத்தை ஏமாற்ற, யார் நினைத்தாலும், அவர்கள் நிச்சயம்,
சட்டம் முன் தண்டிக்கப் பட வேண்டும். “தொழிலாளர்களின் தோழன்” என தன்னை பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சியினர், பல தொழிலாளர்களின் வைப்பு நிதி கணக்கில் (P.F.) கை வைத்த பாதிரியாரை கண்டித்து, என்ன அறிக்கை இதுவரை வெளியிட்டு இருக்கின்றது. அவரை எதிர்த்து என்ன போராட்டம் செய்து இருக்கின்றது? இது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? தொழிலாளர்களுக்கு செய்யப் படும் அநீதி தானே இது?!
சட்டம் தனது கடமையை செய்ய, அந்தப் பதவியில் இருந்து விலகி, தான் நிரபராதி, என நிரூபிக்கும் வரை, பதவியை விட்டு ராஜினாமா செய்ய முன் வருவாரா?!
- அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
ஆதாரம் :
https://www.bptravinder.com/about/