கடலூர் மாவட்டதைச் சேர்ந்த போலீஸ்காரர் திருமாவளவன், விருப்ப ஓய்வு பெற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்திருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன். பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரான இவர், கடந்த 2008-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். கடின உழைப்பின் காரணமாக, காவலராக இருந்து தற்போது தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்ததில் இருந்தே தான் வசித்து வரும் பகுதியில் இருக்கும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். காரணம், சிறு வயதிலிருந்தே திருமாவளவனுக்கு அரசியல் ஆசை இருந்ததுதான்.
எனவே, அரசியலில் குதிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த சூழலில், கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த காவல்துறை வேலையை உதவிவிட்டு, பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். சென்னை தி.நகரிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டிருக்கிறார். பாரத பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை ஆகியோரால் கவரப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்ததாக கூறியிருக்கிறார்.