மாணவர்களின் தேசபக்தியை வளர்க்க, இனி பாடப் புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் !

மாணவர்களின் தேசபக்தியை வளர்க்க, இனி பாடப் புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் !

Share it if you like it

பள்ளி மாணவர்கள் மத்தியில் தேச பக்தியை வளர்க்க, அவர்களின் பாடப் புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை சேர்க்குமாறு, என்சிஇஆர்டி அமைத்த உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி கடந்தாண்டு இந்தக் குழுவினை அமைத்திருந்தது. குழுவின் பிரதான முடிவாக, சமூக அறிவியல் பாடங்களுக்கான பரிந்துரைகளை தற்போது இறுதி செய்துள்ளது. இது குறித்து இன்று விளக்கமளித்த, என்சிஆர்டி குழுவின் தலைவர் சிஐ ஐசக்,“சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை மாணவர்களுக்கு கற்பிக்க குழு வலியுறுத்துகிறது.

பதின்ம பருவத்தில் மாணவர்கள் தங்கள் சுயமரியாதை, தேசபக்தி ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது அவசியம். தேசபக்தி போதியளவில் இல்லாத காரணத்தினால், உயர்கல்வி முடித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இந்தியாவை விட்டு ஆண்டுதோறும் வெளியேறுகிறார்கள். தாய்நாடு அளித்த கல்வி மற்றும் அறிவினை, இதர நாடுகளின் வளர்ச்சிக்காக செலவிடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ”மாணவப் பருவத்தில் உரிய தேசபக்தி ஊட்டப்படாததால், பிற நாடுகளில் குடியுரிமை பெற்று அங்கேயே வாழத் தொடங்குகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்துகொள்ளவும், தாய்நாடு மீது பற்று கொள்ளவும், நாடு மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீது அன்பை வளர்க்கவும், ஒரே வழியாக அவர்களுக்கு இதிகாசங்கள் உதவும்” என்று தெரிவித்தார்.


Share it if you like it