பாகிஸ்தான் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதி: ஐ.நா. அறிவிப்பு!

பாகிஸ்தான் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதி: ஐ.நா. அறிவிப்பு!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டின் அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்திருக்கிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் அப்துல் ரஹ்மான் மக்கி. இந்தியாவில் 2011 நவம்பர் 26-ம் தேதி நடந்த மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர்தான் இந்த மக்கி என்பது குறிப்பிடத்தக்கது. இவன், பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி, மூளைச்சலவை செய்து பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராக்குவது உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான். குறிப்பாக, இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த இளைஞர்களை தூண்டுவதுதான் இவனது முக்கிய வேலையாகக் கொண்டிருக்கிறான். மேலும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்குத் தேவையான அனைத்து நிதி ஆதாரங்களையும் திரட்டுவதில் இவன்தான் முக்கியப் பங்கு வகுத்து வருகிறான்.

அப்துல் ரஹ்மான் மக்கியை ஏற்கெனவே தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்திருக்கிறது. அதேபோல, அமெரிக்காவும் அறிவித்திருக்கிறது. தவிர, 2020-ம் ஆண்டு பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புக் குழு மக்கியை குற்றவாளி என்று அறிவித்து சிறைத் தண்டனை விதித்தது. ஏற்கெனவே, அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியை அறிவித்தது. அப்போது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டு வருவதுபோல, மக்கியையும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டு வந்தது. வழக்கம்போல, கடந்தாண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தபோதும் சீனா முட்டுக்கட்டை போட்டது. இந்த நிலையில்தான், தற்போது அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்திருக்கிறது.


Share it if you like it