பள்ளிகளில் சீருடைதான் அணிய வேண்டும்… புர்கா அணியக் கூடாது! முஸ்லிம் நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

பள்ளிகளில் சீருடைதான் அணிய வேண்டும்… புர்கா அணியக் கூடாது! முஸ்லிம் நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

Share it if you like it

பள்ளிகளில் சீருடைதான் அணிய வேண்டும். புர்கா அணியக் கூடாது என்று கேரள ஐகோர்ட் நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்திருப்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவகாரம் ஹிஜாப். அதாவது, கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் முகத்தை மூடி ஹிஜாப் அணிந்தும், பர்தா மற்றும் புர்கா அணிந்தும் வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநிலம் உடுப்பு அரசு கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகளும் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு, ஹிந்து மாணவ, மாணவிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மேலும், ஹிந்து மாணவர்களும், மாணவிகளும் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதையடுத்து, ஹிஜாப், பர்தா, புர்கா அணிய அரசு தடைவிதித்தது. மீறி அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, தடையை கண்டித்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. ஆகவே, பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதேசமயம், ஹிஜாப், பர்தா, புர்காவுக்கு எதிரான கருத்துகளும் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் நிலவுகிறது. இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை நசுக்குவதாகவும், இது பெண் அடிமைத்தனம் என்றும் அச்சமூக பெண்களே குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில்தான், 2018-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதாவது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள கிறிஸ்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இஸ்லாமிய சகோதரிகள் இருவரின் சார்பில், அவர்களது தந்தை முகமது சுனீர் என்பவர், அம்மாநில ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அம்மனுவில், தங்களது குழந்தைகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி, மத அடிப்படையில் உடை அணியும் உரிமை தங்ளுக்கு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது முஸ்டாக், மனுதாரர் மத அடிப்படையில் உடை அணிய தங்களுக்கு உரிமை உண்டு என்று கூறுகிறார். அதேபோல, பள்ளி நிர்வாகத்துக்கும் சில அடிப்படை உரிமைகள் இருக்கிறது. அந்த வகையில், எல்லா மாணவிகளும் சீருடை அணிந்து வரும்போது, இவர்கள் இருவர் மட்டும் வித்தியாசமாக புர்கா அணிந்து வருவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமை என்பதை ஒருவரின் உரிமையை பாதுகாப்பதற்காக, மற்றவர்களின் உரிமையை பறிப்பதற்காக அல்ல. ஆகவே, பள்ளி நிர்வாகத்தின் சட்டப்படி சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பை வழங்கியது ஒரு இஸ்லாமிய நீதிபதி என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

இதைத்தான் சமூக ஆர்வலர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள். அனைவரும் சீருடை அணிந்து வரும்போது, சிலர் மட்டும் வித்தியாசமாக பர்தா, புர்கா போன்ற ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகவே, உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் நடப்பது தேவையில்லாத அரசியல். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்கின்றன என்று குற்றம்சாட்டுகிறார்கள். மேலும், சமீபத்தில் கேரளாவில் ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே சீருடை என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது கேரள மாநில அரசு. அதாவது, ஆண், பெண் இருபாலரும் சட்டை, பேண்ட்தான் அணிய வேண்டும் என்பதுதான் இத்திட்டம். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத அரசியல் கட்சிகள், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்வதால் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.


Share it if you like it