மூசேவாலாவின் பெற்றோரை சந்தித்து அமித்ஷா ஆறுதல்!

மூசேவாலாவின் பெற்றோரை சந்தித்து அமித்ஷா ஆறுதல்!

Share it if you like it

பிரபல பஞ்சாப் பாடகரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

யூ டியூப்பில் 1,30,30,000 சந்தாதாரர்களை கொண்டவர் சித்து மூசேவாலா. பஞ்சாப்பின் பிரபல பாடகர் ஆவார். இவர், உட்பட 400-க்கும் மேற்பட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில், அனைவருக்கும் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் இதுநாள் வரை அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென விலகி கொண்டார். அதனை வெளிப்படையாகவே அறிவிக்க செய்தார் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில், பிரபல பாடகர் மூசேவாலா மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் பஞ்சாப்பையும் தாண்டி இந்தியா முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்து.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூசேவாலாவின் பெற்றோரை சண்டிகரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, தங்கள் மகனின் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Share it if you like it