ஹிந்து பெண் கொலை: முகமது அஷ்ரப் கைது!

ஹிந்து பெண் கொலை: முகமது அஷ்ரப் கைது!

Share it if you like it

நகை மற்றும் பணத்திற்காக ஹிந்து பெண்ணை கொலை செய்த கொத்தனார் முகமது அஷ்ரப் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் ஹல்த்வானி பகுதியிலுள்ள காளிகா காலனியைச் சேர்ந்தவர் சங்கர் சிங் பிஷ்ட். இவர் பாஜ்பூரிலுள்ள பாங்கேடா காவல்நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மம்தா பிஷ்ட். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள். யு.எஸ். நகரிலுள்ள கிச்சா பகுதியில் வசிப்பவர் முகமது அஷ்ரப். கொத்தனார். இந்த சூழலில், கடந்த 3-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அஷ்ரப், மம்தா வீட்டுக்கு வந்திருக்கிறார். பின்னர், ஜன்னல்களில் கிரில் பொருத்துவது தொடர்பாக, மம்தாவிடம் பேசிய அஷ்ரப், கிரில்களை போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அஷ்ரப்தான், ஏற்கெனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, வீட்டின் ஜன்னல் கிரில்களை பொருத்திக் கொடுத்தவர் என்பதால், மம்தாவும் வீட்டிற்குள் அனுமதித்திருக்கிறார்.

ஆனால், உள்ளே நுழைந்த அஷ்ரப், தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து மம்தா தலையில் தாக்கி இருக்கிறார். மேலும், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் மம்தாவை குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர், வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு எஸ்கேப்பாகி விட்டார். தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். ஆனாலும், அஷ்ரப் தனது இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளங்களை மறைத்து விட்டதால், குற்றவாளியை கண்டு பிடிப்பதில் சற்றே சிரமமாக இருந்தது. எனினும், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றின் துணையுடன், அஷ்ரப்தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “அஷ்ரப் நிறைய கடனில் இருந்திருக்கிறான். ஏற்கெனவே, மம்தா வீட்டிற்கு வேலைக்கு வந்தபோது, அவரது வீட்டில் நிறைய நகைகள் மற்றும் பணம் இருப்பதை பார்த்திருக்கிறான். மேலும், கான்ஸ்டபிள் சங்கர் சிங் பிஷ்ட், வெளியூரில் வேலை பார்ப்பதையும் தெரிந்து கொண்டான். மேலும், மம்தா மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தையும் தெரிந்து கொண்டான். ஆகவே, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நேரமாகப் பார்த்து, ஆயுதங்களுடன் தயாராக வந்திருக்கிறான். ஏற்கெனவே, வேலைக்கு வந்தவன் என்பதால் மம்தாவும் நம்பி வீட்டிற்குள் விட்டிருக்கிறார். ஆனால், அவன் நகை மற்றும் பணத்திற்காக மம்தாவை கொலை செய்திருக்கிறான். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை” என்றார்கள்.


Share it if you like it