சாராயத்தை ஒழிக்க வேண்டியது மத்திய அரசுடையது என தி.மு.க. கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் கள்ளச்சாராயம் அருந்தி கிட்டதட்ட 22 பேர் அகால மரணமடைந்துள்ளனர். அந்த வகையில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் கவிஞருமான வைரமுத்து தீட்டியிருக்கும் கவிதை பொதுமக்களின் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின், கவிதை இதோ …
சாராயம் ஒரு திரவத் தீ கல்லீரல் சுட்டுத்தின்னும் காட்டேரி நாம் விரும்புவது கள்ளச் சாராயமற்ற தமிழ்நாட்டை அல்ல; சாராயமற்ற தமிழ்நாட்டை மாநில அரசு கடுமை காட்டினால் கள்ளச் சாராயத்தை ஒழித்துவிடலாம் ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்.