தி.மு.க.விலிருந்து வெளியேற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு செய்து விட்டார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பகீர் தகவலை தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பா.ம.க. மற்றும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று கூறினார். மேலும், தான் பதவி ஆசை பிடித்தவன் அல்ல என்றும், ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, இரண்டே வருடங்களில் பதவியை ராஜினாமா செய்ததாகவும், அதேபோல தற்போதும் எந்த நேரத்திலும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
திருமாவளவனின் இந்த திடீர் பேச்சுக்கு காரணம் என்று பலரும் யோசித்து வந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு புதிய தகவலை சொல்லி இருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கழட்டி விட ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். இத்தகவல் எப்படியோ திருமாவளவனுக்கு தெரியவந்திருக்கிறது. எனவே, தி.மு.க.விலிருந்து விடுதலைச் சிறுத்தைகளை நீக்குவதற்கு முன்பாக தாமே வெளியேறும் முடிவுக்கு திருமா வந்திருக்கிறார். இதனால்தான், பதவியை ராஜினாமா செய்யத் தயராக இருப்பதாகவும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் என்று கூறியிருக்கிறார்.
இது தவிர, இன்னும் பல விஷயங்கள் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்…