கூலிப்படையை ஏவிய வி.சி.க. பெண் நிர்வாகி!

கூலிப்படையை ஏவிய வி.சி.க. பெண் நிர்வாகி!

Share it if you like it

கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க வேண்டி, கூலிப்படையை வி.சி.க. பெண் நிர்வாகி ஏவி இருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், சிதம்பர நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர், தம்மை தேர்ந்தெடுத்த ஹிந்து மக்களுக்கு செய்த நன்மைகளை விட, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதையே தனது முழுநேர தொழிலாக கொண்டவர். இதன்பின்னணியில், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி சுதா என்பவர் தற்போது பெரும் சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் ஞானமணி. இவர், தச்சு தொழில் செய்து வருபவர். இவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரே கடத்தி சென்று இருக்கின்றனர். இதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், தமிழ் அழகன், வேலுமணி என இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவி சுதாவிடம், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை ஞானமணி கடனாக பெற்று இருக்கிறார்.

உரிய நேரத்தில், அவரால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், சுதாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது, ஞானமணியிடம் கொடுத்த கடனை திரும்ப பெற்று விட வேண்டும் என்பதற்காக, வி.சி.க.வின் ஒன்றிய செயலாளர் ரவியின் துணையுடன் ஞானமணியை கடத்தியதாக தெரிவித்துள்ளனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் சுதாவை கைது செய்துள்ளனர். தலைமறைவாக, இருக்கும் ரவி உள்ளிட்ட மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே என்ற முதுமொழி நினைவுக்கு வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it