‘ரீல்’ போலீஸாருக்கு மத்தியில் ‘ரியல்’ போலீஸ்!

‘ரீல்’ போலீஸாருக்கு மத்தியில் ‘ரியல்’ போலீஸ்!

Share it if you like it

ஆயிரம் போலீஸாருக்கு மத்தியில் ஒரு போலீஸ்காரராவது நேர்மையாகவும், நல்லவராகவும் இருப்பார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் ரீல் போலீஸ் அல்ல, ரியல் போலீஸ் என்று நம் கண் முன்பே நிரூபித்திருக்கிறார் போலீஸ்காரர் ஒருவர்.

1000 குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதை மையமாக வைத்தே நமது சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், ஒரு குழந்தை கூட கல்வி கற்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் சர்வ சிக்ஷா அபியான் திட்டம். இத்திட்டம் கிராமப் புறங்களில் வசிக்கும் பலரும் தெரியவில்லை. இத்திட்டத்தைப் பற்றி கிராம மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறியதோடு, தினமும் 3 வேலை சாப்பாடு, வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயறு என்று மத்திய மாநில அரசுகளின் திட்டங்களையும் எடுத்துக் கூறி, கிராமத்தில் இருக்கும் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில், அக்குழந்தைகளின் பெற்றோரிகளிடம் வேண்டுகோள் விடுத்தும், மிரட்டும் வகையில் கூறுகிறார் ஒரு போலீஸ்காரர்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும் அந்த போலீஸ்காரருக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it