சாரதா சிட் ஃபண்ட் மோசடி: ப.சிதம்பரம் மனைவி சொத்துக்கள் முடக்கம்!

சாரதா சிட் ஃபண்ட் மோசடி: ப.சிதம்பரம் மனைவி சொத்துக்கள் முடக்கம்!

Share it if you like it

நாட்டையே உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினியில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது சாரதா நிதி நிறுவனம். 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து 30,000 கோடி ரூபாய் நிதியை பெற்று மோசடி செய்ததாக 2013-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனம் மூடப்பட்டு, அதன் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், 42 கோடி ரூபாய் செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில், சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை விசாரணை நடத்தின. இந்த சூழலில், இந்த வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. திபேந்திரா பிஸ்வாஸ், அஸ்ஸாம் மாநில முன்னாள் எம்.எல்.ஏ. அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த விசாரணை அடிப்படையில், நளினி சிதம்பரத்தின் 3.30 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.


Share it if you like it