பாரதிய ஜனதா கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!

பாரதிய ஜனதா கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!

Share it if you like it

ஒருமுறை பாரதிய ஜனதா கட்சி ஒரு மாநிலத்தில் வெற்றிபெற்றால், பெரும்பாலும் அவர்களே தொடர்ந்து அந்த மாநிலத்தை ஆட்சி செய்வார்கள்.

குஜராத், மத்திய பிரதேஷ், கோவா, அசாம் போன்ற மாநிலங்கள் அதற்கு மிகப்பெரிய உதாரணங்கள்.

ஹிந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் என்று இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி, அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு, சிறுபான்மையினர் வாக்கு வங்கியின் உதவியோடு காங்கிரஸ் கட்சி சில மாநிலங்களை பல ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்திருக்கிறது.

சாதியின் பெயரால் ஹிந்துக்களை பிளவுபடுத்தி, அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு. பொருளாதார வளர்ச்சியை அந்த மக்களிடம் இருந்து அகற்றி, தொடர்ந்து ஏழைகளாகவே வாழவைத்த, கம்யூனிஸ்ட் கட்சி, ஒன்றிரண்டு மாநிலங்களை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது.

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, மார்தட்டிக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற அரசியல்வாதிகளும் சில மாநிலங்களை தொடர்ந்து ஆட்சி செய்வதும் உண்டு.

ஆனால் இவை அனைத்திலிருந்தும் முற்றிலும் வித்தியாசமான கட்சி; பாரதிய ஜனதா. நல்ல திட்டங்கள், நிர்வாக திறமை, நல்லாட்சி, மக்கள் தலைவர்களின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி இந்திய தேசம் ஒன்று. இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒன்று என்கின்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ஒரே கட்சி; பாரதிய ஜனதா மட்டும்தான்.

பாஜக ஆளும் மாநிலங்களில் வாழும் தமிழக மக்களிடம் பேசினால்; 8/10 பேர் பாஜகவை பாராட்டுவார்கள். மீதி 2 பேர் அவர்கள் மதத்தின் மீது கொண்ட பற்றினால் ஒருவேளை எதிர்மறை கருத்து சொல்லக்கூட வாய்ப்பு உண்டு.

தமிழக மக்களே ஒரு முறை தவறாக வாக்களித்தால் வாழ்க்கையின் 5 ஆண்டுகள் பறிபோய்விடும். கிணற்றுத் தவளையாக இருந்து இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாறப் போகிறோம்.

மதமாற்ற கும்பல்களின் கைக்கூலிகள் பரப்பிய விஷமத்தனமான பிரச்சாரத்தின் காரணமாக அகந்தை எனும் கேன்சர் நம் அனைவரையும் பாதித்துள்ளது. இதற்கு ஒரே மருந்து கண்களைத் திறப்பது, காதுகளை விரிப்பது, உண்மையை ஏற்பது.


Share it if you like it