யோகியின் 7 வரலாற்று சாதனை!

யோகியின் 7 வரலாற்று சாதனை!

Share it if you like it

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.கவே ஆட்சியை பிடித்து இருக்கும் சூழலில், அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத். பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார்.

உலகின் மிகப் பழமையான நாகரிகத்தை பின்பற்றக் கூடிய, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் தனது தோளில் சுமக்கும் 5. அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் யோகி ஆதித்யநாத். இவரது வெற்றி இமயத்தை விட உயர்ந்தது என்று உ.பி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், உ.பி வரலாற்றில் 7 சாதனைகளை படைத்துக்காட்டி இருக்கிறார் முதல்வர் யோகி.

முறியடித்த சாதனைகள் வருமாறு…

1) உ.பியில் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ததோடு, இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

2) தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட 5-வது முதல்வர்.

3) 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்த முதல் முதல்வர்.

4) உ.பி-யில் இரண்டாவது முறையாக முதல்வராக வரும் முதல் முதல்வர்.

5) 15 ஆண்டுகளுக்கு பின் முதல்வரான முதல் எம்.எல்.ஏ.

6) தனது ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்த மூன்றாவது முதல்வர்.

7) நொய்டாவுக்கு சென்று வந்தால் பதவி பறிபோய்விடும் என்ற மூடநம்பிக்கை தகர்த்து எறிந்த முதல் முதல்வர்.


Share it if you like it