Share it if you like it
எந்த ஒரு தொழில்முறை குற்றவாளியும் தொழிலதிபர்களை மிரட்ட முடியாது என உ.பி. முதல்வர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உ.பி. முதல்வர் இவ்வாறு பேசினார் : “இனி எந்த ஒரு மாஃபியாவும் எந்த ஒரு தொழிலதிபரையும் தொலைபேசியில் மிரட்ட முடியாது. அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த 2012-17 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்தன. ஆனால், 2017 முதல் இதுவரை (யோகி ஆதித்யாநாத் முதல்வராக இருக்கும் காலம்) ஒரு கலவரம் கூட நிகழவில்லை. ஓர் ஊரடங்கும் பிறப்பிக்கப்படவில்லை. கடந்த காலத்தில் நிகழ்ந்ததுபோன்ற சம்பவங்கள் இனி எழாது. இதன் காரணமாக மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழிற்சாலைகளை அமைக்கவும் ஏற்ற சூழல் உருவாக்கப்பட்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Share it if you like it