உண்டியல்களில் பணம் கொட்டுகிறீர்கள். அந்த பணத்தை பள்ளிகளுக்கும்,  மருத்துவமனைகளும், கொடுக்கவும் என்று கூறியவர் 2,500 கோடி குறித்து வாய் திறப்பாரா? 

உண்டியல்களில் பணம் கொட்டுகிறீர்கள். அந்த பணத்தை பள்ளிகளுக்கும்,  மருத்துவமனைகளும், கொடுக்கவும் என்று கூறியவர் 2,500 கோடி குறித்து வாய் திறப்பாரா? 

Share it if you like it

ஒரு வருடத்திற்கு முன்பு விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகை ஜோதிகா இவ்வாறு பேசி இருந்தார்.

நான் ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். அப்போது உலகப் புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைப் பார்க்காமல் போகாதீர்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் அது என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே அந்தக் கோயிலைப் பார்த்திருக்கிறேன். உதய்பூரில் இருக்கும் அரண்மனைகளைப் போல அவ்வளவு அழகான கோயில் அது.

தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷுட்டிங் இருந்தது. தஞ்சை கோயிலுக்கு நேர் எதிராக அந்த மருத்துவமனை உள்ளது.  நான் பார்த்ததையெல்லாம் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. அவ்வளவு வேதனை மிகுந்த நிகழ்வு. இதன் பிறகு, அந்த கோயிலுக்கு செல்ல எனக்கு தோன்றவில்லை. இதை வேண்டுகோளாக உங்களிடம் வைக்கிறேன். கோயில்களுக்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள். பராமரிக்கிறீர்கள்.

உண்டியல்களில் பணம் கொட்டுகிறீர்கள். தயவு செய்து அதே பணத்தை பள்ளிக்கூடங்களுக்காகவும், மருத்துவமனைகளுக்காகவும், கொடுத்து உதவுங்கள். கோயில்களைப்போலவே மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியவை என்று நடிகை ஜோதிகா தமிழக மக்களுக்கும், அன்றைய அரசுக்கும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழகத்தில் கொரோனோ தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி இன்று வரை சரியாக கிடைக்காத நிலையில், 2,500 கோடியில் பூங்கா தற்பொழுது அவசியமா? அந்த பணத்தில் மருத்துவமனை, பள்ளி கூடங்களை, கட்டலாமே என்று விடியல் தரமால் தொடர்ந்து, தமிழக மக்களை ஏமாற்றி வரும் சிக்ஸர் முதல்வரிடம் நடிகை ஜோதிகாவோ அல்லது சூரியாவோ கேள்வி கேட்க  முன்வருவார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹிந்து மதத்தை மட்டுமே குறி வைத்து தாக்கும் பிரபலங்கள்!


Share it if you like it