1882-ஆம் ஆண்டில் சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மசூதி ஒன்று கட்டப்படுகிறது. இந்த திடீர் முயற்சியை எதிர்த்து அங்குள்ள ஹிந்துக்கள் கடுமையாக போராடியதால், ஹிந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது. மசூதியும் இடிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் முக்கிய நபராக இருந்தவர், அன்றைக்கு சேலத்தில் இளம் வழக்குரைஞராகத் திகழ்ந்த சேலம் விஜயராகவாச்சாரியார். அவர் அப்போது சேலம் நகரமன்ற உறுப்பினராகவும் இருந்தார். கலவரத்தைத் தொடர்ந்து, விஜயராகவாச்சாரியாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார். அதை எதிர்த்து போராடி, வழக்கில் இருந்து விடுதலை ஆனார் விஜயராகவாச்சாரியார். மேலும், அவருக்குக் கிடைத்த சிறைத் தண்டனையைக் காரணம் காட்டி நகரமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது. அதை முறியடித்த்தோடு, தன்னை நீக்கியதற்காக முறையீடு செய்து அன்றைய தினத்தின்படி ரூ.100 இழப்பீடு பெறுகிறார் விஜயராகவாச்சாரியார்.
இந்தக் கலவரச் செய்தியும், விஜயராகவாச்சாரியாரின் நடவடிக்கைகளும் தேசிய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஒரு செய்தி ஊடகங்களுக்குச் செல்வதற்கு முன்பே, சமூக வலைதளங்களில் இன்றைக்கு வெளியாகிறது. அப்போதெல்லாம் ஒரு செய்தி வெளியான ஒரு வாரத்துக்குப் பிறகே மக்களிடம் பேசப்படுமாம். அப்படி சேலம் செவ்வாப்பேட்டை மசூதி இடிப்பு சம்பவமும் நாடு முழுவதும் பேசப்படுகிறது. ஹிந்துக்கள் ஒன்றிணைந்து வெற்றி கொள்ள முடியும் என்ற செய்தி அப்போது ஆச்சரியமூட்டும் செய்தி. இந்தச் செய்தி உத்தரப் பிரதேசத்திலும் பரவியது. அயோத்தி மக்களிடமும் பரவியது. செவ்வாய்ப்பேட்டை மக்களே வெற்றி பெறும்போது, அயோத்தி மக்கள் வெற்றி பெற முடியாதா? என்ற உத்வேகத்துடன் ஸ்ரீராமஜென்மபூமியை மீட்கும் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். அயோத்தி போராட்டத்துக்கே அடித்தளமிட்டது சேலம் சம்பவம்.
இந்த விஷயம் இத்துடம் முடியவில்லை. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆங்கிலேய அதிகாரியான ஆலன் ஹூம், சேலம் விஜயராவாச்சாரியாரிடம் நட்பு கொண்டார். தான் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது, முதல் மாநாட்டிற்கு விஜயராகவாச்சாரியாரை அழைக்கிறார். 1885-இல் காங்கிரஸ் கட்சி தொடங்கியது முதலே தமிழகத்திலும், தேசிய அளவிலும் முக்கியமான மிதவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயராகவாச்சாரியார், 1920-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டில்தான் ஒத்துழையாமை இயக்கம் அறிவிக்கப்பட்டது. 1944-ல் தான் இறக்கும் வரையிலும் செல்வாக்குள்ள, ஹிந்து தர்மத்தின் மீது பிடிப்புள்ள தலைவராக வாழ்ந்தவர், விஜயராகவாச்சாரியார்.
தமிழகம் இன்றும், நேற்றும் மட்டுமல்ல, ஈ.வெ.ரா. தோன்றுவதற்கு முன்பே இது ஹிந்துத்துவ பூமி தான. ஹிந்துத்துவம் சார்ந்த அரசியலுக்கு சாதகமான பூமிதான் என்பதை நிரூபிக்கிறது, சேலம் சம்பவம்.
-அபாகி