Share it if you like it
அஸ்ஸாமியர்களே இம்மண்ணின் மைந்தர்கள் அவர்களின் உரிமையை யாராலும் பறிக்க இயலாது என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சார்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் வன்முறையாளர்களால் கலவரங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை வன்முறையாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில மக்களுக்கு உரை நிகழ்த்திய சோனோவால் “நம் மொழியின் மீதும் நம் கலாச்சாரத்தின் மீதும் எத்தகைய அச்சுறுத்தலையும் யாராலும் ஏற்படுத்த இயலாது, அஸ்ஸாமியர்களே இம்மண்ணின் மைந்தர்கள். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அரசானது மக்களுக்காக என்றும் துணை நிற்கும், விரைவில் மாநிலத்தில் இணையசேவை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
Share it if you like it