ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் – பிரதமர் மோடி அறிவுரை

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் – பிரதமர் மோடி அறிவுரை

Share it if you like it

பிரதமர் மோடி அவர்கள், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி “பிட் இந்தியா” இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்த இயக்கத்தின் சார்பாக, பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு ஆண்டாக நாடெங்கிலும் நடைபெற்றது. பிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கொண்டாடப்பட்டது. அதில், இந்திய அணி கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், உடற்பயிற்சி நிபுணர்கள், நடிகர்கள் என பலரும் பிரதமர் மோடி அவர்களுடன் கலந்து உரையாடினார்கள்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், குறைந்தது அரை மணி நேரம், தினமும் உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்றும், டென்னிஸ் பேட்மின்டன் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் கூறினார்.

மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவில் முருங்கைக்காயும் பயன்படுத்த வேண்டும் என்றும், மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக இருக்கிறது எனவும், அதனை அன்றாட வாழ்வில் பயன் படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்


Share it if you like it