தேன் நெல்லிக்காய் :
இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால் நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றது. நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காண்போம்.
சளி மற்றும் தொண்டைப்புண் :
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்கள் ஏற்படும். அத்தகையவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி உள்ள சளி அனைத்தும் வெளியேறிவிடும், தொண்டைப்புண்ணும் குணமாகிவிடும்.
இரத்தச் சோகை :
இரத்தச் சோகை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்தச் சோகை குணமாகும்.
முடி வளரும் :
நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
இதயம் வலிமையடையும் :
தினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவதைத் தடுக்கிறது.
பொலிவான சருமம் :
பொலிவான சருமம் பெற நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரித்து சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கண் பார்வை மேம்படும் :
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
செரிமானம் :
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாகும்.
பசி தூண்டப்படும் :
பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் உட்கொண்டு வந்தால் பசியை தூண்டும்.
சிறுநீரக பிரச்சனைகள் :
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக குணமாகிவிடும்.