இயற்கையின் கொடையான அரளிபூக்கள் – நச்சு வாயுக்கள் அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அபூர்வம்

இயற்கையின் கொடையான அரளிபூக்கள் – நச்சு வாயுக்கள் அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அபூர்வம்

Share it if you like it

இயற்கையில் அதிக அளவு மரங்களை வளர்க்கவும் மூலிகை வனங்களை உருவாக்கவோ பாதுகாக்கவோ இயலாத நிலையில் இருக்கும் பாலைவனப் பிரதேசங்களில் கூட திரும்பிய பக்கமெல்லாம் இன்று இந்த அரளி பூக்களை காண முடியும். எண்ணெய் வளம் வளம் மிகுந்த அந்த எண்ணெய் உற்பத்தி வடிகால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட அரபு நாடுகளில் அதன் காரணமாக வெளிப்படும் நச்சு வாயுக்களும் சுற்றுச்சூழல் சீர்கேடும் மிக அதிகம் இயற்கையின் வளமான மண்ணும் நீரும் இல்லாத நிலையில் கூட எந்த சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய அரளிப்பூக்களை அரபு நாடுகளின் அரசுகள் சாலைகள் நெடுஞ்சாலைகள் சாலை ஓரப் பூங்காக்கள் அரசு கட்டிடங்கள் மருத்துவமனைகள் தொழிற்சாலை வளாகங்கள் பள்ளி வளாகங்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் அதிக அளவில் இந்த அரளிப் பூக்களை வளர்த்து பராமரித்து தன் சூழலியலை பாதுகாக்கிறது . இதுவே தங்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் இந்த மண்ணில் பிறந்து உலகெங்கும் சூழலியலை பாதுகாக்கும் அரளிப் பூவின் உன்னதமான மருத்துவ குணத்திற்கு சாட்சியம் .

இயற்கையின் கொடையில் பூக்கள் உன்னதமானது. அதன் மணமும் இயற்கை குணங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அபூர்வமான மருத்துவ சக்தி படைத்தது . இதை உணர்ந்த முன்னோர்கள் பெரும் கூட்டம் கூடும் இடங்களில் சூழலியைலை பாதுகாத்து பிராணவாயுவை உறுதி செய்யும் இயற்கை ஊக்கிகளாக பூக்களை பயன்படுத்தினார்கள். மருத்துவ குணம் நிறைந்த அதன் நன்மைகளை அன்றாடம் பெற வேண்டி அலங்காரம் முதல் தெய்வ வழிபாடு வரை அனைத்திலும் பூக்களுக்கு முதலிடம் கொடுத்தார்கள். இந்த உன்னதத்தின் வழியில் தான் பொன் அள்ளி வைக்கும் இடத்தில் பூ அள்ளி வைத்தாலே நிறைவேறும் என்ற சொல்லாடலையும் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த வகையில் பொண்ணை காட்டிலும் ஒரு படி உயர்ந்து நிற்கும் பூக்கள் இன்றளவும் மனிதனின் வாழ்வில் நலம் தரும் கடமையை செவ்வனே செய்கிறது.

இந்த பூக்களில் நல்ல நறுமணமும் வசீகர அழகும் கொண்ட பூக்களுக்கு அலங்காரம் இறைவழிபாடு விசேஷ அலங்காரம் மேடைகள் என்று எல்லா இடத்திலும் நீங்காத இடம் உண்டு. நறுமணமும் பெரும் வசீகரமோ இல்லாத சாதாரண பூக்களில் இருக்கும் அபூர்வமான மூலிகை சக்தியும் அதன் சூழலில் பயன்பாடும் உண்டு. இதை அறியாத மக்கள் அதை சாதாரணமாக கடந்து போவதும் உண்டு .அந்த வழியில் நமக்கு அதன் முழு அருமை தெரியாமல் நம் அருகில் இருக்கும் ஒரு உன்னதம் தான் அரளி பூக்கள் என்னும் இயற்கையின் கொடை.

வெளிர் நிறம் வெளிர்மஞ்சள் அடர் மஞ்சள் இளஞ்சிவப்பு வெளிர் சிவப்பு என்று பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் அரளிப் பூக்கள் நாம் சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் எல்லா சீதோஷங்களிலும் பார்க்கும் ஒரு பூ வகை. சிறு செடி முதல் பெரும் மரம் வரையிலும் பூத்து காய்த்து குலுங்கும் இந்த அரளிப்பூ வகை பூக்களில் உயர்ந்த மருத்துவ குணம் இருந்தாலும் விதையில் விஷத்தன்மை கொண்டது .அதன் காரணமாக மனிதர்கள் வாழும் மலைக்குள் இந்த அரளி பூக்களை வைத்து வளர்க்கக்கூடாது என்ற வழிகாட்டுதலையும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

ஆனால் இந்த அரளி பூக்கள் நறுமணமற்ற ஒரு வாயுவை வளிமண்டலத்திற்கு தொடர்ந்து வெளியிடும் அபூர்வ சக்தி படைத்தது. இந்த மலர்ந்த அரளி மலரிலிருந்து வெளிவரும் அந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி சூழலிகளை பாதுகாக்கும் மகத்துவம் கொண்டது. அந்த வகையில் துர்வாடை முதல் விஷ வாயுக்கள் வரை காற்றில் பரவி இருக்கும் நச்சை அகற்றி பிராணவாயுவை உறுதி செய்து உயிர் காக்கும் கவசங்களாக வலம் வருவது தான் அரளி பூக்களின் மகத்துவம். அபூர்வ மருத்துவ குணம் கொண்ட இந்த அரளிப் பூக்கள் இயற்கையில் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் முழுமையான தெய்வீக மகத்துவம் கொண்ட மலரென்பதாலும் விஷ விதைகள் கொண்டதாலும் அரளி பூக்களை தலையில் அலங்கார பூக்களாக சூடும் வழக்கம் நம்மில் இல்லை.

இந்த அரளி பூக்களின் நன்மையை உணர்ந்து தான் நம் முன்னோர்கள் பூஜை வழிப்பாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் சகலதோஷ நிவாரணையாக இந்த அரளி பூக்களை முன்னிறுத்தினார்கள். மேலும் ஜோதிடம் புராணம் என்று எல்லா இடங்களிலும் எல்லா தெய்வத்திற்கும் உகந்த மலராக விழா காலங்களில் தெய்வங்களுக்கு விரும்பி சூட்டும் மலர் மாலையாக அரளி பூக்களை குறிப்பிடுகிறது. அந்த வகையில் ஆலயம் விழாக்கள் உற்சவம் பண்டிகை கொண்டாட்டம் என்று அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் பிராணவாயு சங்கடம் நேராமல் அதே நேரத்தில் நோய் தொற்று சுற்றுச்சூழல் சீர்கேடு வராமல் பாதுகாக்கும் மருத்துவக் கவசமாக இந்த அரளிப் பூக்கள் முன்னிறுத்தப்பட்டது.

அதிக போக்குவரத்து பெட்ரோல் டீசல் பயன்பாடு பெருகி வரும் தொழிற்சாலைகள் காரணமாக காற்று மாசு என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதோடு நீண்ட நெடும் பயணத்தின் போது பிரயாண சூழல் அதன் காரணமான அசதி தவிர்க்கவும் புத்துணர்வான பிரயாணத்தை வழங்கவும் தொலைதூர சாலைகளில் நடுவிலும் இரு புறங்களிலும் கூட சமீபமாக இந்த அரளி பூக்களின் செடிகள் அதிக அளவில் நெடுஞ்சாலைத் துறையால் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.

பெருகிவரும் போக்குவரத்து அதன் காரணமான மாசு கட்டுப்பாட்டையும் இந்த அரளிப் பூக்களின் வளர்ப்பு சீராக பயன்பாடும் சமன் செய்யும். சமீபத்தில் தலைநகர் புது தில்லியில் கட்டுக்கடங்காத காற்று மாசும் அதன் காரணமாக தனி போக்குவரத்துக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் வந்த போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சாலையின் இருமருங்கில் முடிந்த வரையில் எல்லா இடங்களிலும் இந்த அரளிப் பூக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பண்டைய காலங்களில் தோஷ நிவர்த்தியாக தெய்வ வழிபாட்டில் முதலிடம் பெற்ற இந்த அரளிப் பூக்கள் முழு முதல் கடவுளான விநாயகர் முதல் நவகிரக வழிபாடு வரை சக்தி வழிபாடு முதல் விழா உற்சவம் வரை அனைத்து இடங்களிலும் முதலிடம் பிடித்தது .வெற்றி பெற்ற அரசனுக்கு அவனது வாளுக்கு சூட்டும் வெற்றி மாலை முதல் அவன் தனது வெற்றிக்காக குலதெய்வத்திற்கு நன்றி காணிக்கையாக வழங்கும் மலர் மாலை வரை அரளிப் பூக்கள் முதலிடம் பிடித்தது. அனைத்திற்கும் மேலாக யுத்த காலங்களில் ஆயுதங்களை பிரயோகிக்கும் போது வெளிப்படும் நச்சுத்தன்மை அதன் காரணமான சூழலியல் மாசுபாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மன்னர்கள் தங்களது எல்லைப் பகுதியிலும் போர்க்களத்திற்கென்று ஒதுக்கி வைத்த போர் பாசறை பகுதிகளிலும் இந்த அரளி பூக்களை அதிக அளவில் வளர்த்து வந்ததும் இந்த பூக்களின் மருத்துவ குணத்திற்கு வளிமண்டல சூழலில் பாதுகாப்பிற்கும் சாட்சியம்.


Share it if you like it