இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி

Share it if you like it

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்தியதீவுகள் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. டி20 தொடரை இந்தியா அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில் சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணிகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய காட்டாயத்தில் இந்திய அணி விசாகபட்டினத்தில் களமிறங்குகிறது. கடந்த போட்டியில் இந்திய அணியின் பஞ்சுவீச்சு சிறப்பாக இல்லாததால் கடும்விமர்சனங்களை சந்தித்தது. இதனால் ஆடும் பதினோரு பேர் கொண்ட அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டிக்கான கணிக்கப்பட்ட அணி விராட் கோலி , ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முஹம்மது ஷமி.


Share it if you like it