இலவசம் மற்றும் மதுபானம் காரணமாக தமிழர்கள் சோம்பேறிகளாகி விட்டனர்..! நீதிபதி கிருபாகரன் வேதனை..!

இலவசம் மற்றும் மதுபானம் காரணமாக தமிழர்கள் சோம்பேறிகளாகி விட்டனர்..! நீதிபதி கிருபாகரன் வேதனை..!

Share it if you like it

நீட் தேர்வு தற்கொலைகளை மிகைப்படுத்தி கூறுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் செலுத்தக்கூடாது. கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா? என்று நீதிபதி கிருபாகரன் சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்..

தி இந்து பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் எஸ். முகமது இம்ரானுல்லா தனது டுவிட்டர் பக்கத்தில்… நீதிபதி கிருபாகரன் தெரிவித்து வரும் கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட கூடியவர்.

நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள்… 

  1. திருமணமான ஆண்களுடன் இளம் பெண்கள் ஓடிபோக கூடிய வழக்குகள் குறைந்தது மாதத்திற்கு 20 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் வருகிறது. இந்த சிக்கலை தீர்க்க தீவிரமாக ஏதாவது செய்ய வேண்டும். இது போன்ற வழக்குகளில் தண்டனையை கடுமையாக இருக்க வேண்டும் என்று  கூறியிருந்தார்.
  2. இனம், மதம், மொழி, அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் பிரிவினைவாத சக்திகளுக்கு மிக கடுமையான எதிர்ப்பு. கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அண்மையில் மோதல் ஏற்பட்டது. ஆனால் சிலர் பகீரங்கமாகவே எதிரி நாட்டை ஆதரித்து இருந்தனர் என்று கூறியிருந்தார்.
  3. பெரும்பாலான தமிழக மக்கள் இலவசம் மற்றும் மதுபானம் காரணமாக சோம்பேறிகளாகி விட்டனர். இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் மாநிலத்திற்கு வருவதே இதற்கு காரணம் என்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it