சூர்யாவை செருப்பால் அடித்தால் 1,00,000 – சொன்னாரா அர்ஜுன் சம்பத்..? Mediyaan Fact Check

சூர்யாவை செருப்பால் அடித்தால் 1,00,000 – சொன்னாரா அர்ஜுன் சம்பத்..? Mediyaan Fact Check

Share it if you like it

செப்டம்பர் 18ம்  தேதி ஒரு தமிழ் நாளிதழ், புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கருத்து சொன்ன நடிகர் சூரியாவை  அடிக்கும்  எவருக்கும் இந்து மக்கள்  கட்சியின் அர்ஜுன் சம்பத் 1 லட்சம் வழங்குவார் என்று ஒரு தகவலை வெளியிட்டது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், நடிகர் சூரியாவை பொது இடத்தில் அடிக்கும்  எவருக்கும் ₹ 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று  அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மன் அவர்கள் கூறியதாக ஒரு வீடியோ வெளியில் வந்தது.

அர்ஜுன் சம்பத் தான் அது போல எதுவும் சொல்லவில்லை எனவும் இந்து மக்கள் கட்சிக்கு  மேற்சொன்ன கருத்துக்களில்  உடன்பாடு இல்லை என்றும் கூறியதோடு, அந்த நபர் கூறிய கருத்துக்களிலிருந்தும்  தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பதிலளித்த இந்து மக்கள் கட்சி, “ஆர்.எஸ். பாரதி சொன்ன கருத்து கட்சியின் கருத்தோ அல்லது ஸ்டாலினின் கருத்தோ அல்ல, அது தனிநபரின் கருத்து என்ற நிலைப்பாட்டை எடுத்தன மீடியாக்கள். அது போல, ‘நாங்கள் கவுண்டர் சிறுமிகளை, செட்டியார் சிறுமிகளை திருமணம் செய்வோம்’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள்  கூறும்போது, அது வி.சி.கே அல்லது திருமாவளவனின்  கருத்தாகக் கருதப்படவில்லை.
ஆனால் மேற்சொன்ன சூர்யாவை அடித்தால்  என்று கட்சி உறுப்பினர் சொன்ன கருத்தை அர்ஜுன் சம்பத் மற்றும் கட்சியின் கருத்தாக  எப்படிக் கூறலாம்? ” என்று குற்றம் சாட்டியது.

அர்ஜுன் சம்பத்தின் மீதான இந்தப் போலியான  அவதூறுகளுக்கு பின்னால் “க்ளோன் மீடியா” என்ற பேஸ்புக் பக்கம் இருப்பதும், அந்த பக்கத்தை நடத்துபவர்களின் பின்புலத்தில் “கோமாளி மீடியா” என்ற பேஸ்புக் பக்கம் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது .இந்த யு டூப் சேனலின் பின்னால் உள்ளவர்கள் சமூக மற்றும் ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) என்ற தீவிர இஸ்லாமிய அமைப்போடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த க்ளோன் மீடியா என்ற பேஸ்புக் பக்கம்  நடிகர் சூர்யாவை மேற்கோள் காட்டி “அந்த ஒரு லட்சம் ஒரு ஏழை மாணவரின் கல்விக்கு உதவும் என்றால், நான் அடி வாங்க தயாராக இருக்கிறேன்”, என்று புதிய கதையை வெளியிட்டுப் பரபரப்பை உண்டாகியுள்ளது. உண்மையில் நடிகர் சூரியா அத்தகைய அறிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. கோமாளி மீடியாவின் இந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அர்ஜுன் சம்பத்தை மையப்படுத்தி இஸ்லாமிய இயக்கங்கள் சமூக நல்லிணக்கத்தை  கெடுக்க முயல்வதாக நடுநிலையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


Share it if you like it