கங்கண சூரிய கிரகணம் தெரிய தொடங்கியுள்ளது. இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு 11.19 மணி வரை நீடிக்கும். சரியாக 9.35 மணி அளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலை பெற்றிருக்கும். அதற்கு பிறகு நிலவு, சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.
இதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது. அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும். அதுவும் மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால்தான் காணலாம்.
தமிழகத்தில் சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம். அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இன்று ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16-ந்தேதிதான் நிகழும்.
கிரகணம் தெரிய தொடங்கியது
Share it if you like it
Share it if you like it