ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி சீனாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு நுழைந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த 15 வயது பிரக்ஞானந்தா, சீனாவின் லியூ யானைத் தோற்கடித்துள்ளார். இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற ஐந்து ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள சீனாவை 7-ம் இடத்தில் உள்ள இந்தியா தோற்கடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் விளையாடிய 9 ஆட்டங்களில் 8-ல் இந்திய அணி வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சென்னையை சேர்ந்த சிறுவன் ப்ரக்ஞானந்தாவுக்கு அனைத்துவிதமான செலவுகளையும் செய்தது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில் ” எங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்த நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு நன்றி. சீனாவை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம்” என கூறியுள்ளார்.