ஜார்கண்டில் பா.ஜ.க முன்னிலை

ஜார்கண்டில் பா.ஜ.க முன்னிலை

Share it if you like it

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி முன்னிலையில் உள்ளது. 81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஐந்தாம் மற்றும் கடைசிக் கட்டத்தேர்தல் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்றுவருகிறது.

இதில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. பா.ஜ.கவானது 29 தொகுதிகளிலும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியானது 13 தொகுதிகளும் முன்னிலையில் உள்ளன. ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு பெரும்பான்மை பெற 41 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it