Share it if you like it
குடியுரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான கருத்துக்களை தெரிவித்து எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டி வருவதாக குற்றம் சாட்டினார்.இதுபோன்ற பிளவுபடுத்தும் குழுக்களுக்கு, உரிய பாடம் கற்பிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
மேலும்“குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்கப்பட்டது.ஆனால் யாரும் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன்,குழப்பத்தை ஏற்படுத்தி, டெல்லியை கலவர பூமியாக மாற்றிவிட்டனர்.பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் பலன்களை, ஏழை மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் வழங்கவில்லை.ஏனெனில் அந்த திட்டத்தில் பிரதமரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.மோடி வேகமாக செயல்பட விரும்புகிறார், ஆனால் இந்த ஆம் ஆத்மி அரசு, அதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.
Share it if you like it