தமிழ் வளர்க்கும் சான்றோன் மோடி..!

தமிழ் வளர்க்கும் சான்றோன் மோடி..!

Share it if you like it

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கொண்ட பிரதமர் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியபோது தமிழில் ‘வணக்கம்’ கூறி தொடங்கினார்.பின்னர் ‘தமிழ் மொழியின் மிகச் சிறந்த நூலான திருக்குறளின் மொழி பெயர்ப்பு தாய்லாந்து மக்கள் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்துவதற்கு வழிகாட்டியாக அமையும்’ என்றார்.மேலும் இல்லறவியலில் 212 -வது அதிகார பாடலான ‘தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற குறளையும் வாசித்து அதற்கான அர்த்தத்தையும் கூறினார்.அதாவது ஒவ்வொருவரும் இடைவிடாமல் முயற்சி செய்து தங்கள் திறமைக்கு ஏற்ப பொருளீட்ட வேண்டும். அவ்வாறு ஈட்டிய பொருளெல்லாம் தகுதி படைத்த மக்களுக்கு அதாவது உழைக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.இந்தியர்களின் வாழ்க்கை முறை இவ்வாறு தான் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.உலக தலைவர்கள் ஒன்று கூடிய ஐ.நா.சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலை மேற்கோள் காட்டியதோடு உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்று உலக நாடுகள் மத்தியில் பிரகடனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் வளர்க்கும் சான்றோன் மோடி..!இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டேன் என தமிழில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it