மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் உண்மையான நண்பன் மக்கள் திலகம் சிவாஜிகணேசன் தான்.
எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழைத்து தம்பி எனக்கு பிறகு ஜானகிக்கு கட்சிப் பணிகளில் நீ கூட இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நடிகர் திலகமும் சரிங்க அண்ணா என்று எம்ஜிஆரிடம் கூறினார். அதேபோல் எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு கட்சி பிளவுபட்டது. அன்று சிவாஜிகணேசனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் இருந்தது.
அவரை திமுக கூட்டணிக்கு அழைத்தது 20 30 சீட் தருகின்றோம் என கூறினார்கள். ஜெயலலிதாவுடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது அவர்களும் அழைத்தார்கள், சிவாஜி செல்லவில்லை. காங்கிரஸ் அழைத்தார்கள் போகவில்லை.
ஜானகியுடன் தேர்தலை சந்தித்தார் படுதோல்வி அடைந்தார். ஆனால் அவரது அண்ணன், மதிப்புக்குரிய மக்கள் திலகம், எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு கொடுத்த அந்த வாக்கை கடைசிவரை அவர் காப்பாற்றினார்.
ஆனால் மக்களிடம் எம்ஜிஆர்-ன் நண்பன் யார் என்று கேள்வி கேட்டால் அவர்கள் சட்டென்று கருணாநிதியின் பெயரை குறிப்பிடுவார்கள்.
உண்மை என்னவென்றால் இது முற்றிலும் தவறு பொய்யாக கருணாநிதி ஆளும் திமுக தலைவர்களால் எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதற்கு உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே.
கட்டுக்கதைகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் அன்றைய பத்திரிக்கை ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு தந்திரமாக அந்த பொய்களை மக்கள் மனதில் நஞ்சு போல் விதைத்து நம்பவும் வைத்தார்கள் திமுகவினர்.
அதே போல் தான் தற்போதைய திமுக பொதுச்செயலாளர் துரை முருகனும் ஒரு மிகப்பெரிய பொய் கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளார். எம்ஜிஆர் அவர்கள் தன்னை ஒரு பிள்ளை போல் பார்த்துக் கொண்டார் என்றும், அதிமுகவுக்கு வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இந்தக் கதைகள் ஒன்றுக்கும் ஆதாரம் இல்லை என்பதுதான் உண்மை. ஆதாரமின்றி இவர்கள் சொல்லும் பொய்களை நம்ப நாம் ஒன்றும் மூட நம்பிக்கை கொண்ட மூடர்கள் அல்ல. இறைவனை நம்பும் பகுத்தறிவுவாதிகள்.