நேத்ராவின் சேவை மனப்பான்மையை பாராட்டிய பாரதப் பிரதமர் மோடி..! முழு கல்வி செலவையும் ஏற்ற தமிழக அரசு!

நேத்ராவின் சேவை மனப்பான்மையை பாராட்டிய பாரதப் பிரதமர் மோடி..! முழு கல்வி செலவையும் ஏற்ற தமிழக அரசு!

Share it if you like it

கொரோனா தொற்றில்  தவிக்கும் தமிழக மக்களுக்கு இன்று வரை பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவிகள் செய்து வருவது வெளி உலகத்திற்கு மெல்ல மெல்ல தெரிய வந்துள்ளது. அண்மையில் மதுரையை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மோகன் தனது மகளின் படிப்பிற்காக  ஜந்து லட்ச ரூபாயை வைத்திருந்தார்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தொகையை பயன்படுத்த வேண்டும் என்று நேர்தரா தனது தந்தையிடம் வலியுறுத்தினார். இதனை அடுத்து ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களுக்காக அப்பணம் செலவழிக்கப்பட்டது. 

அண்மையில் மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் மோடி மோகன் சேவையை பாராட்டி இருந்தார். மோடி பாராட்டிய அடுத்த நாளே முடி திருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ராவை .நா சபை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமித்து இருந்தது.

இதனை அடுத்து நேத்ரா உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  அளூநர் பன்வாரிலால் புரோகித் உட்பட பலர் நேத்ராவின் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it