பெட்ரோலுக்கு கவலை இல்லை – மத்திய அமைச்சர்

பெட்ரோலுக்கு கவலை இல்லை – மத்திய அமைச்சர்

Share it if you like it

ஈரான் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப்பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறுமோ என்ற கவலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாக உலக அரசியலில் நிலவும் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக உள்ளது. எனவே அங்கு நடைபெற்றுவரும் சூழ்நிலைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பும், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்துள்ளது.


Share it if you like it