Share it if you like it
ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்சை 15.5 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மேலும் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கேப்டன் மோர்கனையும் 5.25 கோடிக்கு வாங்கியுள்ளது. விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சார்ந்த அதிரடி பேட்ஸ்மேன் கிரிஸ் லின் தனது அடிப்படை விளையான 2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது கிளென் மேக்ஸ்வெல்லை 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. முன்னணி வீரர்களான யூசப் பதான், டேல் ஸ்டெய்ன் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சுயற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
Share it if you like it