மத்திய அரசிற்கு எதிராக பொங்கிய துரை சிங்கம்..! ’ருத்ரதாண்டவம்’ படத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மிஷநரிகளுக்கு எதிராக பொங்குவாரா? 

மத்திய அரசிற்கு எதிராக பொங்கிய துரை சிங்கம்..! ’ருத்ரதாண்டவம்’ படத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மிஷநரிகளுக்கு எதிராக பொங்குவாரா? 

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக பொங்கிய நடிகர் சூர்யா ருத்ரதாண்டவம்’ படத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மிஷநரிகளுக்கு எதிராக பொங்குவாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நமது நாட்டில் தயாராகும் எந்த ஒரு திரைப்படமும், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்று தான், வெளி வர முடியும். திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகளை வைத்து அதற்கு ஏற்ப தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

இதனை தொடர்ந்து மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 மசோதாவினை அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இது எங்களின் படைப்பு சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று நடிகர் சூர்யா உட்பட பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கிறிஸ்துவர்களை அச்சுறுத்தும் காட்சிகள் ’ருத்ரதாண்டவம்’  படத்தில் இருப்பதால் இயக்குனர் மோகன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நல கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு என்றால் உடனே குரல் கொடுக்கும் நடிகர் சூர்யா கடும் நெருக்கடிக்கு பின்பு ’ருத்ரதாண்டவம்’ படத்தினை எடுத்திருக்கும் சக சினிமாதுறையைச் சேர்ந்த நண்பருக்கு ஆதரவாக குரல் கொடுப்பாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

https://mediyaan.com/cinematography-amendment-bill-2021/

 


Share it if you like it